உன்னை ஊடுருவி நோக்குகிறேன்! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 9 of 10 in the series 24 டிசம்பர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

உன்னை ஊடுருவி நோக்குகிறேன் !

சென்ற தெங்கே சொல் ?

உன்னை அறிந்ததாய் எண்ணினேன்,

உன்னைப் பற்றி

என்ன தெரியும் எனக்கு ?

வேறாகத் தெரிய வில்லை !

ஆயினும்

மாறி விட்டாய் நீ !

உன்னை ஊடுருவி நோக்குகிறேன் !

முன்பு போல் இல்லை நீ.

உன்னுதடுகள் ஏதோ முணுமுணுக்கும்,

என் செவிகள் கேளா !

மென்மை யானது உனது குரல் !

ஆயினும்

தெளிவாய் இல்லை வார்த்தைகள் !

வேறாகத்

தெரியவில்லை நீ !

திருவிளை யாடலை நானும்

கற்றுக் கொண்டேன் !

உன்னை ஊடுருவி நோக்குகிறேன் !

மாறி விட்டாய் நீ.

ஏன் என்று சொல்,

என்னை நீ

ஏன் முறையாய் நடத்த வில்லை ?

காதலுக்கு கெட்ட பழக்கம்

உண்டு;

காணாமல் போகும் இரவில் !

பழைமை வாதியாய்

நீ என்னை,

நினைத்து வருகிறாய் !

ஒரு காலத்தில் மேல் நிலையில்

இருந்தவள் நீ,

ஆனால் அப்படி நீ இன்றில்லை.

ஒரு முரண்பாடு

கீழ்நிலையில் மாறி விட்டாய்

நீ யென்று

உன்னை ஊடுருவிச் சொல்கிறேன் !

Series Navigationஎஸ்.எல்.இ. நோய்மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *