தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா

author
1 minute, 16 seconds Read
This entry is part 18 of 19 in the series 31 டிசம்பர் 2017

அடையாறு – காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடைபெற்றது சென்னை. டிச. 24. அடையாரிலுள்ள காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு கவிஞரும் பத்திரிகையாளருமான மு.முருகேஷ் தலைமையேற்றார். வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார். நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேஷ்குமார், துரை.நந்தகுமார், வானவன், தயானி தாயுமானவன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஹைக்கூ கவிதைகளை வாசித்தனர்.

தமிழின் மூத்த ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுதபாரதி, தனது ஹைக்கூ கவிதை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

விழாவிற்கு தலைமையேற்ற கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, ”தமிழில் அறிமுகமான ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் இன்றைக்கு பலநூறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. வாசகனையும் கூட்டுப் படைப்பாளியாக எழுதத் தூண்டும் ஹைக்கூ கவிதைகளை பல இளைய கவிஞர்களும் ஆர்வத்தோடு எழுதி வருகிறார்கள். ஜப்பானிய மரபுகளைப் பின்பற்றாமல், தமிழ் மண்ணையும் தமிழர்களின் வாழ்வியலையும் இணைத்து எழுதப்படுவதால்தான் தமிழில் ஹைக்கூ கவிதைகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
ஹைக்கூ இதழ்கள், ஹைக்கூ கவியரங்கம், ஹைக்கூ கண்காட்சி, ஹைக்கூ ஆய்வரங்கம்,ஹைக்கூ மொழிபெயர்ப்பு என தமிழ் ஹைக்கூ பல தளங்களிலும் இன்றைக்குபுதுத்தடம் பதித்து வருகிறது.மகாகவி பாரதியால் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த இலக்கிய வகையை, அது தொட்டிருக்கும் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் இந்திய நாட்டிலேயே எந்த இலக்கிய அமைப்பும் கொண்டாடாடும் முன்பு முன்னோடியாக அடையாறு காந்திநகர் வாசகர் வட்டத்தலைவரும்,கவிஞரும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வையவன் அவர்கள் தமது பிறந்தநாளான இன்று தமிழகத்தின் பல்வேறு முனைகளில் இருந்தும் வருகின்ற கவிஞர்களை ஒன்றுகூட்டி இவ்விழாவை ஏற்பாடு செய்து சிறப்புற நடத்திக்காட்டியுள்ளார்.” என்று குறிப்பிட்டார்.

விழாவில், ’சந்தியா பதிப்பகம்’ நடராஜன், எழுத்தாளர் பாரதிபாலன், டாக்டர். ஆனந்த மூர்த்தி, ஓவியர் செந்தமிழ்ச்செல்வன், ’மேன்மை’ ஆசிரியர் மு.மணி ஆகியோர் கலந்துகொண்டனர். சிவகாசி, அறந்தாங்கி, செங்கல்பட்டு, அரக்கோணம், புதுக்கோட்டை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த கவிஞர்கள் ஹைக்கூ கவிதைகளை வாசித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கவிதைப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

விழா நிகழ்வுகளை எழுத்தாளர் குடந்தை பாலு ஒருங்கிணைக்க,
டாக்டர் ஹரிகுமார் நன்றி கூறினார்.

படக்குறிப்பு :

அடையாரிலுள்ள காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழாவில், நூலக வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவனுக்கு நினைவுப்பரிசினை வழங்குகிறார் ‘சந்தியா பதிப்பகம்’ நடராஜன். அருகில், கவிஞர் மு.முருகேஷ், ஓவியக் கவிஞர்அமுதபாரதி ஆகியோர் உள்ளனர்.

Tamil Haiku Centenary
Chennai Dec.24 Adayar Gandhi Nagar Readers’ Circle(Vasagar Vattam) has celebrated Tamil Haiku centenary 10.30 AM with a sharp time sense.The event was sponsored by Vaiyavan, writer, poet and journalist, a resident of Adyar, in Adyar Govt.Library.Poet Mu.Murugesh the senior subeditor the Hindu Tamil presided over the function.He pointed out in his speech the tremendous influence of Haiku poems in Tamil has resulted in hundreds of collection of books, publishing separate little magazines, instigating the academics and poets to do Doctoral researches.His talk suggested about so many poetry meets, exhibitions, translations from Tamil Haiku into other languages like Malayalam. He informed that the poets went on making postal stamps and monumental stone slabs for Haiku.He made laudable comments on Vaiyavan, the president of the Readers Circle initiating the function on his birthday, as the forerunner for Tamil High Haiku centenary throughout India first. Senior Haiku poet Amudha Bharathi, SandhyaPathippagam publisher Natarajan, Dr.Bharathi Balan of Tamilnadu Open University, Dr.V.Ananthamoorthy of SRC, Dr.V.Harikumar, a research Scholar, Artist Thamizh Selvan and Chandar Subramaniyam, editor Ilakkiya vel, a literary magazine had participated in the function.25 poets presented their poems and gifted their collection.While thanking the poets and audience suggested adhering the Tamil form of Haiku, bound to its culture and life, not blindly following the traditional Japanese form.Dr.V.Ananda Moorthy gave a vote of thanks pointing out Vaiyavan’s role as a one-man show in the grand success of the event

Series Navigationமாயச் சங்கிலி!ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *