காதல் கிடைக்குமா காசுக்கு !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 13 in the series 28 ஜனவரி 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 +++++++++++

காதல் கிடைக்க வில்லை

காசுக்கு  !

வைர மோதிரம்

வாங்கி மாட்டுவேன் உனக்கு  

மகிழ்ச்சி தருமாயின் ,

எதுவும் வாங்கி உனக்கு  

அளிக்க முடியும் என்னால்  !

பணத்தைப் பற்றிக்  

கவலை இல்லை எனக்கு ! 

ஆயினும்

காசு கொடுத்து

காதல் கிடைக்க வில்லை

எனக்கு !

இருப்பதை எல்லாம் 

விருப்பப் படிக் கொடுப்பேன்,

என்னை நேசிப்ப தாய்ச்

சொன்னால் !

பணத்தைப் பற்றிக்

கவலை இல்லை எனக்கு !

ஆயினும்

காதல் கிடைக்க வில்லை

காசுக்கு !

பையில் நிறையப் பணம்,

கையில் வைர மோதிரம்

காட்டி

காதல் வாங்கப் போனேன் !

எல்லாரும் சொல்வார்

என்னிடம் :

காதல் கிடைக்காது காசுக்கு !

காசு வாங்காது

காதல் !

 +++++++++

Attachments area

Series Navigationதிரைகள்“என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *