திரைகள்

This entry is part 11 of 13 in the series 28 ஜனவரி 2018

 

அவன் இந்தப்புறமும்

அவன் அப்பா அந்தப்புறமும்

இடையில் சில திரைகள் …

 

அவன் காதலிப்பது

அப்பாவுக்குத் தெரியாது

அவன் குடிப்பதும்

அவன் அப்பாவுக்குத் தெரியாது

 

வேலை தேடும் காலத்தில்

இடையில் விழுந்த திரைகளில்

‘ ஹாய் ‘ யாக அவனும்

கருமமே கண்ணாக அவரும்

 

மனித மனம் விரிந்து பரந்த

மைதானம் இல்லை

எல்லா மனித உறவுகளுக்குமிடையேயும்

திரைகள் எப்போதும்

தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன !

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Series Navigationதொடுவானம் 206. மனமகிழ் மன்றத் தேர்தல்.காதல் கிடைக்குமா காசுக்கு !
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *