நேற்றைய நிழல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 20 of 20 in the series 11 பெப்ருவரி 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

நேற்றைய தினத்திலே

எனது துயரெல்லாம் வெகு தூரம்

போய் விட்டது !

இப்போ தவை மீண்டது போல்

தெரியுது எனக்கு !

நம்பிக் கிடக்கிறேன் இன்னும்

நேற்றைய தினத்துக்கு !

இப்போது

திடீரெனப் பாதி அளவு

வாடிக்கை

மானிடனாய்க் கூட

நானில்லை !

உடலுக்கு மேல் விழுகிறது

ஒற்றை நிழல் !

திடீரென நேற்றைய

தின நினைவு எனக்கு மீளுது !

எனக்குப் புரிய வில்லை,

என்னை விட்டு

ஏனவள் போனாள் என்று.

சொல்லாமலே சென்று விட்டாள் !

தவறாக ஏதோ நான்தான்

உளறி விட்டேன் !

நேற்றைய கூற்றுக்கு

இப்போது

வேதனைப் படுகிறேன் !

காதல் விளையாட் டெனக்கு வெகு

சாதாரண மாய் இருந்தது !

இப்போ தெனக்கு தேவை,

ஒளிந்து கொள்ள

ஓரிடம் !

நேற்றைய தினம் நினைவில்

நிழலாய்ச் சுற்றுது !

Series Navigationபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *