ஹாரி ஸ்டீவன்ஸ் (இந்துஸ்தான் டைம்ஸ்)
பெரும்பாலான இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை தாங்களே உழுது பயிர் செய்தாலும், தலித் என்னும் பட்டியல் இனத்தவர்கள் பெரும்பாலும் நிலமற்றவிவசாயிகளாக மற்றவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களாக, விவசாய கூலிகளாகவே இருக்கிறார்கள் என்று சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்திய சென்ஸஸ் தெரிவிக்கிறது.
இந்த சென்ஸஸ் விவசாயிகளை இரண்டாக பிரிக்கிறது. முதலாவது நிலமுள்ள விவசாயிகள். அடுத்தது நிலமற்ற விவசாய கூலிகள்
பட்டியல் இனத்து விவசாயிகள் மற்றவர்களைவிட விவசாயக் கூலிகளாகவே இருக்கிறார்கள். ஆனால், இது எல்லா இந்திய மாநிலங்களிலும் ஒன்றுபோல இல்லை.
இது பட்டியல் இனத்தவர் (sc/st) விவசாயிகள் நில உடமையாளர்களாக இருக்கிறார்களா இல்லையா என்பதுபற்றிய விவரம்
இது மற்றவர்கள் விவசாயிகள் நில உடமையாளர்களாக இருக்கிறார்களா இல்லையா என்பதுபற்றிய விவரம்
ராஜஸ்தான், சட்டிஸ்கார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பட்டியல் இன விவசாயிகள் நிலமுள்ள விவசாயிகளாகவும் குறைவான அளவே நிலமற்ற விவசாயக் கூலிகளாகவும் இருக்கிறார்கள் என்று அறியத் தருகிறது.
பழங்குடி சமூகங்களில் பெரும்பாலும் நிலங்கள் பரவலாக பகிரப்பட்டிருக்கின்றன. நிலச்சுவாந்தார்கள் இருக்கும் சமூகங்களில் பரவலாக நிலம் பகிரப்படவில்லை என்று பேராசிரியர் ஹிமான்ஷூ கருத்து தெரிவிக்கிறார்
பிகார், ஹரியானா, பஞ்சாப், குஜராத், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாய கூலிகளாகவே இருக்கிறார்கள். சில மாவட்டங்களில் நிலமற்ற விவசாய கூலிகளாக இருக்கும் பட்டியல் இனத்தவரின் சதவீதம் 90%க்கும் அதிகம்..
மத்திய பட்ஜட்டில் விவசாய உற்பத்தி பொருள்களுக்கு அளிக்கப்படும் மானியம், குறைந்த பட்ச நிர்ணய விலை போன்றவைகளால் நிலமுள்ள விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்றும் நிலமற்ற விவசாய கூலிகள் இவற்றால் பயனடைய மாட்டார்கள்.
ஆகையால் பட்டியல் இனத்து விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானியங்களால் ஒரு பயனும் இல்லை என்பது தெளிவு.
பெரும்பாலான பட்டியல் இனத்து விவசாயிகள் நில உடமையாளர்களாக இல்லை.
விவசாயிகளில் நிலமற்ற விவசாய கூலிகள்./ நிலமுள்ள விவசாயிகள் சதவீதம்.
நிலஞ்சன் கோஷ் என்னும் ஆய்வாளர் கூறும்போது, “விவசாயிகள் சமூகத்தை ஒரே குழுமமாக பார்க்கிறோம்.. ஆனால், கொடுக்கும் பலன்கள் எல்லாமே நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கே செல்கிறது. நிலமற்ற விவசாய கூலிகளுக்கு எதுவுமே கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை” என்கிறார்.
மற்ற பொருளாதார நிபுணர்களும் இதை ஒப்புகொள்கிறார்கள்.
விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் எந்த சலுகையும் அதிக கூலியாக விவசாய கூலிகளுக்கு செல்வதில்லை. “ என்றுஅஷ்விணி தேஷ்பாண்டே கூறுகிறார். (டெல்லி ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ்) இருக்கும் எந்த விவசாய கொள்கையும் விவசாய கூலிகளை தொடவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்” என்கிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இணைப்பு
- தமிழ்
- நீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- மீனாம்பாள் சிவராஜ்
- பிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு
- மனச்சோர்வு( Depression )
- என் வீட்டுத் தோட்டத்தில்
- தொடுவானம் 212. ஆலய சுற்றுலா
- மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்