தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
உனது நாள் ஓடுது ,
உன் மனது வாடுது,
நீ தேவை இல்லை என்பதால் !
வஞ்சியின் கனிவு மொழிகள் எனது
நெஞ்சினில் ஊன்றிப் போனது !
காலை எழும் மங்கை
கழிப்பது தன் பொழுதை !
வாழ்வு விரைவது அறியாமல் போனது .
தேவை யில்லை நீ யெனத்
தெரிய வில்லை அவள் விழிகளில் !
காதல் அடையாளம் எதுவும்
காண வில்லை நானும் !
கண்ணீர்த் துளிகள் யாரை
எண்ணி அழுதிடும் ?
நீ அவளை விரும்புவ துண்மை;
அவளும் உனக்குத் தேவையே !
தன் காதல் செத்த விட்ட
தென்றவள் விலகிப் போயினும்,
நம்ப வில்லை நீதான் !
ஆயினும் நீ நினைத்துக் கொள்வது,
அவள் உனைத் தேடுவதாய் !
ஆயினும் அவள் கண்ணுக்குள்
நீயில்லை தெரியுதா ?
நீடித் திருந்த காதல் உணர்வு
ஓடிப் போனது புரியுதா ?
வீட்டுக் குள்ளே நீ !
வெளியே செல்வது அவள் !
அவள் சொல்வது,
தனக் கொருவன் இருப்பதாய் !
உனது நாள் ஓடுது !
உன் மனது வாடுது !
- தமிழ்
- நீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- மீனாம்பாள் சிவராஜ்
- பிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு
- மனச்சோர்வு( Depression )
- என் வீட்டுத் தோட்டத்தில்
- தொடுவானம் 212. ஆலய சுற்றுலா
- மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்