மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 10 of 10 in the series 11 மார்ச் 2018

மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்

* மார்ச் மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,

* மலேசியா எழுத்தாளர்கள் விமலா ரெட்டி, சந்திரா குப்பன், செல்வம் ஆகியோர் கல்ந்து கொண்டு மலேசியா தமிழர்கள் வாழ்வும் பல்வேறு இலக்கியப்பணிகளும் பற்றிப் பேசினர்

* 3 நூல்கள் வெளியீடு :

*. சுப்ரபாரதிமணியனின் ” மறைந்து வரும் மரங்கள் -“ முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) வெளியிட சசிகலா, பிரணிதா, பிஆர்நடராஜன் பெற்றுக்கொண்டனர்.

* செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “-

-செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “ நூலை ( எதிர் பதிப்பகம் , பொள்ளாச்சி) தமுஎக சங்க ஈஸ்வரன் வெளியிட , பிஆர்கணேஷ், பொன்னுலகம் குணா பெற்றுக்கொண்டனர்

* ம. நடராசன் – நாவல் “ விசக்கடி “முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) ம. நடராசன் – நாவல் “விசக்கடி “ வெளியிட, கே.தங்கவேல் ( Ex MLA), பெற்றுக் கொண்டார்

முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) உரையில்.. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏழாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் பள்ளிகளின் கட்டமைப்பிலும் ஆசிரியர்களின் குறைபாட்டிலும் பள்ளிகள் அப்படியே ஏகதேசம் உள்ளன..குழந்தைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய் செயல்வழிக்கற்றல் முறை குறித்து கூடுதல் கவனம் இல்லாமல் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு கல்வி சாராத, பள்ளி சாராதாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவ்ர்கள் மேல் பனி அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.

ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. குழந்தைகளின் கலவிக்காகப் பெற்றோர் உழைத்துச் சேமித்த தொகை முழுவதும் செலவு செய்யவேண்டியுள்ளது. கலவிக்கடன்க்காக்க் கிடைத்த சம்பளத்தில் படித்து முடித்தபின் குழந்தைகள் வேலை செய்ய வேண்டியுள்ளது. தரமான கல்வி கிடைப்பதில்லை. குறைந்த சம்பளத்தில் தரமற்ற ஆசிரியர்களைக் கொண்டு நட்த்துவதால் இப்படி நேர்கிறது. தாய்மொழி வழியில் கற்பது தலைசிறந்த கல்வியாக அடிப்படை சிந்தனையை வளர்க்கும் கல்வியாகும். பிறமொழிகள் தேவை கருதி ஆர்வம் கருதி கற்கலாம் . திணிப்பு வேண்டாமே. சமச்சீர் கல்வி அரசு ஏற்று நடத்துவது, அருகமைபள்ளிகள், சேவை நோக்கிலான கல்வியை அனைவருக்கும் தரும் நோக்கத்தை அரசுகள் கைக் கொள்ளவேண்டும்.

காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருவதில் உள்ள சிக்கல்கள் மாணவர்களை தற்கொலைக்குத் தள்ளுகிறது .

முன்னிலை: தோழர்கள் எம்.இரவி..,பிஆர் நடராசன்

சிறப்பு விருந்தினர்கள்: எஸ். விசுவநாதன் ( ட்வின் ஸ்டார் ), எஸ். விசுவநாதன் சிறப்புரை : கண .குறிஞ்சி ( PUC L ) , கே.தங்கவேல் ( Ex MLA), பேரா.சுந்தரம்

நூல்கள் வெளியீடு :

*. சுப்ரபாரதிமணியனின் ” மறைந்து வரும் மரங்கள் “

* செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “

* ம. நடராசன் – நாவல் “ விசக்கடி “

* கவிதை நூல்கள் அறிமுகம்..: துருவன் பாலா *

“:மதிவதனன்( தாழ்ப் பறக்கும் வானம் ) மகாராசன் ( சொல்நிலம் ), வெள்ளை வானவில் ( ஊ.வ.கணேசன்)

* உரைகள் : முதல் நாவல் அனுபவம்

திருப்பூர் படைப்பாளி :, முத்துபாரதி

*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : குறி, புதிய கோடாங்கி, படச்சுருள்

மற்றும்…பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன்.

. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488

Series Navigationதொடுவானம் 212. ஆலய சுற்றுலா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *