மீண்டும்… மீண்டும்…

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 19 in the series 8 ஏப்ரல் 2018

அரிசங்கர்

காலம் 2098…
அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர் அடைந்த அதிர்ச்சி அவருக்குக் கண்டிப்பாகஇதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது. முதல் சோதனையாக அவர் இரண்டு வாரம் முன்பு அவர் செல்லாமல்விட்ட ஒரு கான்ஃப்ரன்ஸ்க்கு சென்று வந்தார். அந்தச் சோதனை வெற்றி பெற்றவுடன் அடுத்த சோதனையாக ஒரு மாதம்கழித்து நடக்கப் போகும் தன் பேத்தியின் திருமணத்தைக் காண மாறுவேடத்தில் சென்றார். தன் அறைக் கதவை திறந்துமெல்ல எட்டிப்பார்த்தார். திருமணவீடு அமைதியாக இருந்தது. எந்த வேலையும் நடந்த மாதிரி தெரியவில்லை. அவர்மகன் மட்டும் தனியே சோபாவில் சோகமாக அமர்ந்திருந்தார். அவருக்குக் குழப்பமாக இருந்தது. எதிர்காலத்தில் இருந்துவந்த அவர், நிகழ்காலத்தில் இருக்கும் தன்னை தேடினார். எங்கும் காணவில்லை. மெல்ல வெளியே வந்த அவர் படிஇறங்கலாம் என்று நினைத்த போது சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் புகைப்படத்தை அதிர்ச்சியுடன் பார்த்தார். மாலைமாட்டப்பட்டிருந்தது. தோற்றம், மறைவு எனத் தேதிகள் போடப்பட்டிருந்தது. அதிர்ச்சியுடன் மெல்ல தன் அறைக்குப் பின்வாங்கினார். அவர் அறைக்குள் நுழையும் கடைசி வினாடி ஒரு அலறல் சத்தம் கேட்டது. அவர் திரும்பிப்பார்த்த போதுஅவர் பேத்தி அவரைப் பார்த்து பயந்து அலறிக்கொண்டிருந்தாள். வேகமாக உள்ளே வந்த அவர் தன் கால இயந்திரத்தைஇயக்கித் திரும்ப வந்துவிட்டார்.
தன் மரணத்திற்கு முன் தான் செய்த எதாவது ஒரு தவறை சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். என்ன செய்வதுஎன அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. வீட்டில் திருமண வேலைகள் பரபரப்பாக நடக்கிறது. தண்டச்செலவுகள் எனமனதிற்குள் சொல்லிக்கொள்கிறார். எந்த வேலையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறார். பழைய நினைவுகள்அவரை சூழ்ந்தவாறே இருக்கிறது. சிறுவயது நினைவுகள், இளமைக்கால நினைவுகள் என ஒவ்வொன்றாகநினைத்துப்பார்க்கிறார். பள்ளியில் படித்த நண்பர்களில் இப்போது யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என யோசிக்கிறார். சட்டென அவர் மனதிற்குள் வருகிறான் நவின்.
நவின் நினைவுக்கு வந்தவுடன் ஒரு சிறு பதட்டம் அடைந்தார். நவின் அவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். பள்ளியில் அவருடைய ஒரே நண்பன். ஆனால் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்துபோனான். தீடிரென்று அன்றுபள்ளிக்கு வந்த ஒருவரால் வருன் காப்பாற்றப்பட்டான். அவர் நவீனையும் காப்பாற்றச் சென்றார். ஆனால் அவர் நவீனுடன்சேர்ந்து இறந்துவிட்டார். பல வருடங்கள் அது அவரை வாட்டியது. காலப்போக்கில் அதை அவர் மறந்தாலும், எப்போதாவதுஅவர் கனவுகளில் அவன் வந்து கொண்டேயிருந்தான். அவன் நினைவுகளில் மூழ்கியிருந்த வருனுக்கு அப்போது தான்அந்த எண்ணம் வந்தது. நம்மிடம் இருக்கும் கால இயந்திரத்தை வைத்து நவினையும், தன்னைக் காப்பாற்றியவரையும்காப்பாற்றினால் என்ன என்று. ஆனால் இது அவ்வளவு வருடம் பின்னோக்கி செல்லுமா என்று தெரியாது. ஒரு வேலைப்பழுதடைந்து விட்டால். அல்லது அங்கேயே மாட்டிக்கொண்டால். என்ன நடந்தால் என்ன. எப்படியும் அடுத்த மாதம் நாம்உயிரோடு இருக்கப் போவதில்லை. அதற்கு முன் ஒரு முயற்சி செய்தால் என்ன. சாகும்போது திருப்தியுடனாவதுசாகலாமே. இந்த எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவருக்குத் தோன்றியது. நவினை காப்பாற்றலாம் எனமுடிவெடுத்து இருக்கையிலிருந்து எழுந்தார்.
கூகுளில் தேடி தன் பள்ளியில் தீவிபத்து நடந்த நாளையும், அந்தப் பள்ளி தற்போது என்னவாக இருக்கிறது எனகண்டுபிடித்தார். அது தற்போது ஒரு நட்சத்திர ஹோட்டலாக மாறியிருந்தது. அந்த ஹோட்டலில் தரைதளத்தில் ஒருஅறையை புக் செய்து தன் இயந்திரத்துடன் அங்குச் சென்று தங்கினார். அவர் ஒரு பிரபல ஆராயிச்சியாளர் என்பதால்எந்த இடைஞ்சலும் அவருக்கு ஏற்படவில்லை.
யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற அட்டையை அறை வாசலில் மாட்டிவிட்டு, அறைக்குள் தன் இயந்திரத்தைஇணைக்க ஆரம்பித்தார். இணைப்பு வேலைகள் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று தன் மனதிற்குள் ஒரு முறைநினைத்துக்கொண்டார். பிறகு தீவிபத்து நடந்த நாள், நேரம், திரும்பி வரவேண்டிய நேரம் என அனைத்துத்தகவல்களையும் உள்ளீடு செய்துவிட்டு, ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டுவிட்டு தன் இயந்திரத்தை இயக்கினார்.
ஒரு மின்னல் தோன்றி மறைந்தவுடன் அவர் சுயநினைவுக்கு வர சில வினாடிகள் ஆனது. தான் எங்கே இருக்கிறோம் என்றுஒரு முறை பார்த்தார். தான் படித்த பள்ளியின் எலக்ட்ரிக்கல் ரூமில் இருந்தார். இவர் இயந்திரத்தில் வந்தவுடன் ஏற்பட்டஅதிக மின் ஆற்றல் அங்கிருந்த மின் சாதனங்களை தாக்கியதால் மின் கசிவு ஏற்பட்டுத் தீப்பிடிக்க ஆரம்பித்தது. பதட்டமான இவர் உடனே தன் இயந்திரத்திய பிரித்து அதை வேகமாகப் பள்ளியின் வெளியே மறைத்துவிட்டு அவர்வருவதற்குள் தீ பரவ ஆரம்பித்துவிட்டது. இவர் நவீனை தேடி உள்ளே சென்றார். போகும் வழியில் மற்ற சிறுவர்கள்வேகமாக வெளியேற ஒரு சிறுவன் காலில் அடிப்பட்டு விழுந்து அழுதுகொண்டிருந்தான். மெல்ல அந்தச் சிறுவனைஉற்றுப் பார்த்தார். அது அவர் தான். அவர் அந்தச் சிறுவனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினார். அவருக்கு இப்போதுகொஞ்ச கொஞ்சமாக எல்லாம் புரிய துவங்கியது. இது ஒரு டைம் லூப். இதில் தன்னால் நவினை காப்பாற்றவே முடியாது. தன் சிறுவயதில் தன்னைக் காப்பாற்றியது நான் தான் என்பது அவருக்கு இப்போது புரிந்தது. இருந்தாலும் அவர் மனம்சமாதானம் ஆகவில்லை. வருனை வெளியே பாதுகாப்பாக இறக்கிவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்தார். அவரால் நவீனைகண்டுபிடிக்கவே முடியவில்லை. தீ அதிகமாக பரவியது. அவரால் முன் பாக்கம் செல்ல முடியவேயில்லை. வேகமாகமாடிக்குச் சென்று பின் பக்கம் இருந்த மரத்தின் வழியாகக் கீழே இறங்கினார். அதற்குள் சிறுவர்கள் அனைவரும்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தான் இறந்து விட்டதாகவே வருன் நினைப்பான் என்றுநினைத்துக்கொண்டார். வேறு வழியில் நவினை காப்பாற்றலாம் எனச் சிந்தித்தார். ஆனால் அவன் இறக்க வேண்டும்என்ற விதியை அவரால் மாற்ற முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தான் இயந்திரத்தை மறைத்து வைத்த இடத்தைநோக்கி நடக்கத் துவங்கினார்.

குறிப்பு: இந்தக் கதை விக்டர் ஹுயூகோ வின் டைம்மிஷின் கதையின் பாதிப்பில் எழுதியது.

Series Navigationபூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்கவிதைப் பிரவேசம் !
author

Similar Posts

2 Comments

    1. Avatar
      ஹரிசங்கர் says:

      தவறுக்கு மன்னிக்கவும். குழப்பதில் மற்றிப்போட்டுவிட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *