எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்ஸியில் ஒரு வாசகர் சந்திப்பு:

This entry is part 2 of 8 in the series 9 செப்டம்பர் 2018

(Details of this in English is given below after Tamil version too.)

எழுத்தாளர் பெருமாள் முருகன் தொழில் ரீதியாக ஒரு தமிழ்ப் பேராசிரியர். நவீன தமிழ் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் கொண்டவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து தடம் பதித்து இயங்கி வருபவர். திறனாய்வாளர். கொங்கு நாட்டுச் சொல்லகராதியைத் தொகுத்து வெளியிட்டவர்.

அமெரிக்கா வந்திருக்கிற அவருடன் ஒரு வாசக சந்திப்பு நியூ ஜெர்ஸியில் நடக்க விருக்கிறது. அதன் விவரங்கள்:

நாள்: செப்டம்பர் 15, 2018 சனி பிற்பகல் 3:00 மணி முதல்

இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502

தொடர்புக்கு: பி.கே. சிவகுமார்

மின்னஞ்சல்: pksivakumar [at] gmail [dot] com

அலைபேசி: 732 நான்கு எட்டு ஐந்து 8403

தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

இது நட்புணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரை, ஆளுமையை அருகில் இருந்து பார்க்கவும், அவருடன் informal ஆக உரையாடவும் உதவுகிற நிகழ்ச்சி. அதன் மூலம் எழுத்தாளரை, அவர் எழுத்தை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் வழி வகுக்கக் கூடிய வாய்ப்பு.

நியூ ஜெர்ஸி மற்றும் அருகில் இருக்கிற மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்கள், முன்கூட்டியே மேற்கண்ட மின்னஞ்சல் அல்லது அலைபேசி எண்ணுக்கு RSVP செய்தால் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

இந்தப் பதிவை உங்கள் நட்பு வட்டத்திலும் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி.

Meet with Tamil Writer Perumal Murugan at New Jersey:

Date: Sep 15, 2018 Saturday from 3:00 PM onwards

Venue: 3 Waters Lane, Belle Mead, NJ 08502

For RSVP: PK Sivakumar – pksivakumar [at] gmail [dot] com – 732 four eight five 8403

To help coordiante the event better, RSVP would help us.

This is an informal and friendly event with Writer Perumal Murugan to understand the writer and his writings better.

Tamil literary enthusiasists in New Jersey and nearby states are welcome to attend.

Please help by sharing this event details with your friends circle too.

Series Navigationமுகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1வேறென்ன வேண்டும்?
author

பி கே சிவகுமார்

Similar Posts

Comments

  1. Avatar
    BSV says:

    தலைப்பை பார்த்தவுடன் – என்னென்ன பேசியிருப்பார் இந்த பிரச்சினைக்குள்ளான நாவலாசிரியர்? – என்று தெரிய ஆவலாக உள்ளே நுழைந்தால், அட சே! இது ஒரு விளம்பரம் மட்டுமே.

    ”எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்சியில் ஒரு கலந்துரையாடல்: அனைவரும் வருக” என்றல்லவா தலைப்பிடப்பட்டு இருந்திருக்க வேண்டும்? கொடுத்த தலைப்பின்படி கலந்துரையாடல் நிகழ்ந்து முடிந்ததாகல்லாவா உணரப்படும்!

    உரையாடல் நிகழ்ந்தவுடன் அதன் சிறப்பம்சங்களைத் தொகுத்து திண்ணையில் வெளியிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *