மருத்துவக் கட்டுரை நோய்க் கிருமித் தொற்றுகள்

This entry is part 4 of 8 in the series 9 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

நம் உலகில் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளன. நம் கண்களுக்குத் தெரியாத இவைகளில் பெரும்பான்மை மனிதனுக்கு தொல்லை தராதவை. இவற்றில் பல உயிருக்கு தேவையானவையும் கூட. இவற்றில் சில மனித உடலின் வெளியிலும் உள்ளேயும் வாழ்கின்றன. இவ்வாறு மனித உடலினுள் வாழும் சில வகையான கிருமிகள் உடலின் சில செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இவற்றில் சில நோய்களை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைக்கவும் செய்யும் ஆபத்தானவை. இத்தகைய வைரஸ், பேக்டீரியா, புரோட்டோசோவா, புழுக்கள் போன்றவையே தொற்று நோய்களை உண்டுபண்ணுகின்றன.
உலகில் மரிக்கும் மனிதர்களில் 25 சத விகிதத்தினர் தொற்று நோய்களால் இறக்கின்றனர். வளரும் நாடுகளில் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கவோ குணப்படுத்தவோ முடியும். ஆனால் பொருளாதார பற்றாக்குறை, சுற்றுச்சூழல் சீர்கேடு, போதுமான தடுப்பு முறைகள் இல்லாத காரணங்களால் இவை தொடர்ந்து பரவிவருகின்றன.
தொற்று நோய்களை உண்டாக்கும் நோய்க் கிருமிகளை நான்கு விதமாகப் பிரிக்கலாம். அவை வருமாறு:
1. பிரையான் ( Prions ) இவை மிக சமீபத்தில் கண்டுபிடிக்கப்படட நுண்ணுயிரிகள். இவை ஒரு புரோட்டின் மாலிக்கூல் ( One Protein Molecule ) கொண்ட உயிரிகள்.
2. வைரஸ் – ( Virus ) இவை புரோட்டீனும் நியூக்கிளிக் அசிட் கொண்டது. ஒரு வைரஸ் ஒரு டி.என்.ஏ. அல்லது ஒரு ஆர்.என்.ஏ. மரபணு உடையது. இவை தானாக இயங்க முடியாமல் மனித உடலின் உறுப்புகளின் செல்களின் உதவியுடன் இனப்பெருக்கம் செய்யவல்லவை.
3. பேக்டீரியா – ( Bacteria ) இவற்றில் டி.என்.ஏ. வும் ஆர்.என்.ஏ.வும் உள்ளன.இவற்றைச் சுற்றி செல் மெம்பிரேன் என்னும் சுவரால் மூடப்பட்டுள்ளது. இவை உடல் உறுப்பின் உதவியின்றி தானாக இயங்கி இனப்பெருக்கம் செய்யவல்லவை..
4. இயூகாரியோட்ஸ் ( Eukaryotes ) – இவை மிகவும் வளர்ச்சியடைந்த உயிரிகள். இவற்றில் செல்களின் அமைப்பும் அவற்றின் தனித்துவ செயல்பாடுகளும் உள்ளன. இவற்றில் காளான்களும் புழுக்களும் அடங்கும
இவ்வாறு பல கிருமி வகைகள் நம் உடலினுள் வாழ்த்து வருகின்றன. அவற்றில் சில நமக்கும் அவற்றுக்கும் பயனுள்ள வகையில் நன்மை செய்கின்றன. ( Symbiotic ). வேறு சில எந்த பாதகமும் செய்யாமல் நம் உடலில் வாழ்கின்றன. ( Commensals ).
இந்த இரண்டு வகையானவையும் உடலின் எதிர்ப்புச சக்தியைத் தாக்கி உடலின் வேறு பகுதிகளுக்குள் புகும்போது கிருமித் தொற்று உண்டாகி நோய் ஏற்படுகிறது.இவை தவிர உடலின் வெளியிலிருந்தும் கிருமிகளின் தாக்குதலால் நோய் ஏற்படலாம்.
நோய்களின் அறிகுறிகள் கிருமிகளின் தாக்குதலாலும் அதை சமாளிக்க உடலின் எதிர்ப்பாலும் உண்டாகும் மாற்றங்கள்.இவை. வெல்வேறு கிருமிகளின் தொற்றுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கும்.

கிருமித் தொற்று பரவும் விதங்கள்.

* உடலுக்குள்ளே உண்டாகும் தொற்று – உடலின் ஒரு பகுதியில் உள்ள கிருமிகள் வேறொரு பகுதிக்கு பரவுதல். உதாரணம் பெண்களுக்கு மலக்குடலிருந்து கிருமிகள் சிறுநீரகத் தொற்று. உண்டாக்கும். தோலினமேல் உள்ள கிருமிகள் சொறிவதின் மூலம் உள்ளே புகுந்து தோல் அழற்சியை ( Cellullitis ) உண்டுபண்ணும்.
* காற்று வழியாக பரவுதல். – ( Airborne ) – சுவாசக் குழாய்களைத் தாக்கும் பல கிருமிகள் இருமல், தும்மல், மூலம் காற்று வழியாக பரவுகின்றன.
* மலம் வாய் வழியாக பரவுதல். ( Faeco – oral spread ) – சுகாதாரமற்ற உணவு பரிமாறுதல், பாதுகாக்கப்படாத நீர்பருகுதல், சுய சுகாதாரம் குறைவு காரணங்களால் மலத்திலுள்ள கிருமிகள் வாய் வழியாக உள்ளே செல்லுதல்.
* பூச்சிகள் மூலம் பரவுதல் ( Vector – borne disease ) கொசுக்கள் மூலம் மலேரியா, ஃபைலேரியா, பன்றிக் காய்ச்சல், சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவுதல்.
* நெருங்கிய மனித உறவு மூலம் ( Direct Person to Person spread ) நெருக்கமாக இருப்பதால் சொறி சிரங்கு, உடலுறவால் பாலியல் நோய்கள், எச்.ஐ. .வி , ஹெப்படைட்டீஸ் பி போன்ற நோய்கள் பரவுதல்.
* நேரடியான தோற்று ( Direct inoculation ) – காயம் உண்டாகும்போது டெட்டனஸ், காளான் வகைகள், நாய் கடியால் ரேபீஸ் போன்ற நோய்கள்.
* தொற்று உண்டான உணவு வகைகளை உட்கொள்ளுதல். ( Consumption of infected materials ) – முட்டை, கோழி இறைச்சி, பால் போன்ற உணவுவகைகள் மூலம் பரவும் கிருமிகள் உண்டுபண்ணும் டைபாய்ட், ப்ருசெல்லோசிஸ் போன்ற நோய்கள்.

கிருமிகள் தொற்றை தடுக்கும் முறைகள்

கிருமிகள் உற்பத்தியாகும் இடத்தையும் அவை பரவும் விதத்தையும் அறிந்து செயல்படுவது முக்கியமாகும்.
* கிருமிகளின் உற்பத்தியை அழித்தல் – தீவிர தடுப்பு திட்ட்ங்கள் மூலம் நோயாளிகளைக் கண்டுபிடித்து குணமாக்குவதுடன் தடுப்பு ஊசியும் போடுதல். இதற்கு நல்ல உதாரணம் அம்மை நோயை அடியோடு ஒழித்தது.
* கொசுக்களை அழித்தல். சுற்றுப்புற சுகாதார முறைகள். கொசுக்கள் கடிக்காமல் இருக்க பாதுகாத்தல்.
* உணவுகளை சுகாதார முறையில் தயாரித்து பரிமாறுதல்.
* பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல்.கழிவு நீர் குடி நீருடன் கலக்காமல் இருத்தல்.
* காற்று வழியாக பரவும் நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் இருமுவதையும் தும்முவதையும் தவிர்த்தல். தேவைப்பட்டால் அவர்களைத் தனிமைப் படுத்தி ( isolation ) சிகிச்சை அளித்தல்.

( முடிந்தது )

Series Navigationவேறென்ன வேண்டும்?தொடுவானம் 239. தோல்வியும் தீர்மானமும்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *