என் நாக்கு முனையில் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 7 of 8 in the series 9 செப்டம்பர் 2018

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

என்ன சொல்ல வேண்டும்

என்றெண்ணி

உன்னோடு பேச விழையும் போது

சில சமயம் எனக்கு

ஓரிரு நாட்கள் கூட ஆகும் !

ஆனால் சொற்கள் வெளி வராமல்

நின்றுவிடும் நுனி நாக்கில் !

நீல நிறம் வானில் மங்கும் போது,

வேலை இருப்ப தில்லை

எனக்கு !

உனக்குச் சொல்ல புதிதாய் ஒன்றை

நினைத்துப் பார்ப்பேன் !

ஆனால் சொற்கள் வெளி வராமலே

நின்று விடும் நுனி நாக்கில் !

மக்கள் சொல்வது : ஏகாந்தனாய்

நான் இருப்பதாய் !

அது மெய்யில்லை என்று

அறிவாய் நீ !

உன் மீதுள்ள என் காதலை

உறுதிப் படுத்த

ஒரு தருணம் காத்திருக்கிறேன் !

உரைத்தவை, செய்தவை

நினைவூட்ட

விரைவில் வரும் எனக்கு அந்நேரம்.

மணப்பேன் உன்னை

திருமணத்தில் நாமிருவரும்

ஒருவராய் வாழ்வோம் !

சொற்கள் நிற்கா இனிமேல்

என் நுனி நாக்கில் !

நிற்கா சொற்கள் இனிமேல்

என் நுனி நாக்கில் !

Series Navigationபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்புநல்லதோர் வீணை செய்தே….
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *