Posted in

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

This entry is part 1 of 9 in the series 23 செப்டம்பர் 2018

இறைவன் திருக்கருணையுடனும் பல நண்பர்கள் ஒத்துழைப்புடனும் அடையாறு காந்தி நகர் க்ளப் கிரிக்கெட் மைதானம் அருகில் உள்ள அரசினர் நூலகத்தில் ஒரு வாசகர் வட்டம் நிகழ்ந்து வருகிறது. தாங்கள் இம்முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வது காந்திநகர் வாசிகளுக்கு புத்தூக்கம் தரும் கடந்த சில மாதங்களாக அடையாறு காந்தி நகர் நூலக வாசகர் வட்ட மாதாந்திரக் கூட்டம் சில தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழாது இருந்தது. இம்மாதம் கல்கி வைத்தியநாதன் அவர்களின் சகோதரரும் மாபெரும் நிர்வாகியுமான டாக்டர் வி.கே அவர்களின் நூலை முன்வைத்து நிகழவிருக்கும் கூட்டத்தின் அழைப்பிதழை இணைத்துள்ளேன். அன்புகூர்ந்து நேரில் அழைத்ததாகக் கொண்டு கூட்டத்திற்கு வந்து பத்மவிபூஷண் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நிர்வாக மேலாண்மையை இளையதலைமுறைக்கு பகிர்ந்தளிக்க வேண்டுகிறேன்.

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, நம் காலத்து மாமனிதர்களில் ஒருவர். இந்தியாவின் நிர்வாகத்துறையின் பிதாமகராகக் கருதப்படுபவர். கல்கி வைத்தியநாதன் அவர்களின் சகோதரர்

பிஎச்இஎல், மாருதி, ஸெயில் என்னும் ஸ்டீல் அத்தாரிடி ஆகிய மூன்று முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியவர். மத்திய அமைச்சருக்குரிய அந்தஸ்தோடு திட்டக்கமிஷனில் உறுப்பினராக இருந்தவர். தொழில் அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர். பன்னாட்டு நிறுவனங்களின் பாய்ச்சலில் இருந்து இந்திய நிறுவனங்களைப் பாதுகாத்திட அமைக்கப்பட்ட ‘என்எம்சிசி’ யின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர். நாட்டின் உயர்நிலைக் கல்விக்கூடங்களான ஐஐடி –டில்லி, ஐஐஎம் –அகமதாபாத், ஐஐஎம்- பெங்களுரு ஆகியவற்றின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தவர்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சென்னை உத்தண்டியில் உள்ள இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வேந்தராக இருக்கிறார். நூறு ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் திருச்சி தேசீயக் கல்லூரியின் உயர்கல்விக்கான அறிஞர் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள கிருஷ்ணமூர்த்திக்கு சோவியத் அறிவியல் அகாடெமி பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இந்திய அரசின் மிக உயர் விருதுகளான ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’, ‘பத்மவிபூஷண்’ மூன்றையும் பெற்றவர். ஜப்பானின் உயர்விருதான ‘ரைசிங் சன்’ விருதும் பெற்றவர்.

Series Navigationபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *