நானோர் இழப்பாளி  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 7 of 9 in the series 7 அக்டோபர் 2018

 

 

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கன டா

++++++++++++++++

 

நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி !

வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

நேசித்த பெண்டிரில் நான்  வென்றது,

நேசித்த வனிதரில் நான் இழந்தது,

எல்லோரிலும் ஒருத்தியை மட்டும்

இழந்தி ருக்கக் கூடாது நான் !

கோடியில் ஒருத்தி அவள் !

எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்,

இறுதியில் அவளே  வென்றாள்.

தோற்றது நான் !

நானோர் இழப்பாளி !

ஒட்டி இருந்தவளை இழந்தேன் !

நானோர் இழப்பாளி !

வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

 

நான் சிரித்து வந்தாலும்

நகைச்சுவை நாயகன் இல்லை !

முகமூடிக்குக் கீழே

அழுது கொண்டிருக்கிறேன் !

வானிருந்து மழை பொழிவது போல்

வீழும் என் கண்ணீர்த் துளிகள் !

நான் அழுவது எனக்கா ?

இல்லை அவளுக்கா ?

தவறென்ன செய்தேன்

தகாத இந்த தலை விதிக்கு ?

தாமத மானதென நோகிறேன் !

 

கர்வம் வரும் முன்னே !

கவிழ்ச்சி வரும் பின்னே !

கதை சொல்வேன் உமக்கெல்லாம்,

கவனம் வைப்பீர்

இழப்பு எதிரே வரும் முன் !

இழப்பாளி  நான் !

ஒட்டி இருந்தவளை இழந்தேன் !

இழப்பாளி நான் !

வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை !

 

++++++++++++++++

Series Navigationநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *