சூரியன் பின் தொடர்வேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 9 of 10 in the series 14 அக்டோபர் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++

ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு

ஓடிப் போனேன் நானென்று !

ஆனால்

நாளை மழை தூவலாம் !

நானும் சூரியன் பின் போகலாம் !

ஒருநாள் அறிவாய் நீ

உனக்கு ஏற்றவன் நானென்று !

ஆனால்

நாளை மழை தூவலாம் !

நானும் சூரியன் பின் போகலாம் !

நேரம் வந்து விட்டது,

ஆருயிர்க் காதலி !

பிரிய வேண்டும் நானும் !

இறுதியாய் காதலி ஒருத்தியை நான்

இழந்து போவதை

அறிவாய் நீயும் முடிவில் !

ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு

ஓடிப் போனேன் நானென்று !

ஆனால்

நாளை மழை தூவலாம் !

நானும் சூரியன் பின் போகலாம் !

Series Navigationதொடுவானம் 224. கமிஷன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *