முழு மாயன் எழுத்து மொழியையும் அழித்த ஒரு கத்தோலிக்க பாதிரியார்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 10 of 10 in the series 4 நவம்பர் 2018

க்ரைக் ஏ ஜேம்ஸ்

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக நியூயார்க் டைம்ஸ் இதழ், மாயன் எழுத்துக்களை படிக்கும் புரிந்துணர்வை விவரிக்கிறது. உண்மை என்னவென்றால், ஸ்பானிஷ் இன்குவிஷிசன் என்னும் ஸ்பானிய மதவிசாரணையின் போது, ஒரு கத்தோலிக்க பாதிரியார் வேண்டுமென்றே பல தசாப்தங்களாக கடுமையாக உழைத்து மாயன் எழுத்துக்களையும் கலாச்சாரத்தையும் அழித்ததாலேயே இவ்வாறு மாயன் எழுத்துக்களை படிக்கும் அறிவு மறைந்தது என்பதே. டியாகோ டி லாண்டா Diego de Landa என்ற இந்த பாதிரியார் மாயன் எழுத்துக்களை பற்றிய அனைத்து அறிவையும் துடைத்து ஒழித்து பேச்சு மொழியையும் ஏறத்தாழ ஒழித்தார்.

டியாகோ டி லாண்டாவின் ஒரு நபர் மதவிசாரணை கிறிஸ்துவ மதத்தின் சகிப்புத்தன்மையற்ற கொள்கையின் சக்திக்கு ஒரு சிறப்பான உதாரணம். இது யூத மதத்தில் உருவாகி பின்னர் கிறிஸ்துவர்களால் ஒரு கடும் தீவிரத்தோடு எடுத்துகொள்ளப்பட்டு, மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் பரவி ஆக்கிரமித்தது இந்த சகிப்புத்தன்மையற்ற கொள்கை. யாஹ்வே மட்டுமே ஒரே கடவுள் என்றும் மற்ற கடவுள்களை கும்பிடுபவர்கள் பாவம் செய்கிறார்கள் என்றும் இந்த சகிப்புத்தன்மையற்ற கொள்கை அறிவிக்கிறது. யாஹ்வேயின் பெயரால், கொலை, அடிமைத்தனம், கட்டாய மதமாற்றம், மற்ற மதங்களை அடக்குதலும் அழித்தலும், இனவெறி, இன்னும் பல ஒழுக்கக்கேடுகளை இந்த சகிப்புத்தன்மையற்ற கொள்கை நியாயப்படுத்துகிறது. (அதாவது மற்ற தெய்வங்களை கும்பிடும் பெரும் பாவத்தை துடைக்க, அவ்வாறு கும்பிடுபவர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாடு)

கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்ட பல மாயன் மக்கள் கத்தோலிக்க, யாஹ்வே, இயேசு, பரிசுத்த ஆவி வழிபாட்டையும், ஏராளமான கத்தோலிக்க சாமியார்கள், தேவதைகள் (angels) ஆகியோரை தங்களது பாரம்பரிய மதத்தில் இணைத்துக்கொண்டனர் என்பதை டியாகோ டி லாண்டா கண்டுபிடித்தபோது அவரது மனத்தின் பின்னணியில் இந்த சகிப்புத்தன்மையற்ற கொள்கையே அரசோச்சியது. மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் இன்னும் சிலைகளை வணங்கிகொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தபோது, தனது “குழந்தைகள்” தன்னை புறம் தள்ளி, தன்னுடைய வாழ்நாள் வேலையை வீணடித்துவிட்டார்கள் என்று கருதினார்.

ரோமன் கத்தோலிக்கராக இருந்தததாலும் இந்த சகிப்புத்தன்மையற்ற கொள்கையை கொண்டிருந்ததாலும், அவர் தாம் இவ்வாறு ஏமாற்றப்பட்டதை பழி தீர்க்க, யுகாடன் பகுதி முழுவதும் பெரும் மத விசாரணையை மேற்கொண்டார். மாயன் மதத்தின் அனைத்து அறிவையும் பூண்டோடு அழித்துவிட முடிவு கொண்டார். மாயன் மதத்தின் முக்கிய ஆணிவேராக மாயன் மொழியும் அதன் எழுத்துக்களும் இருப்பதை கண்டார். ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு 1699இல் ஸ்பானிய போர்வீரர்கள், மாயன் எழுத்துக்களை எழுத தெரிந்த மாயன் எழுத்தாளர்கள் இருந்த நகரத்தையே முழுவதுமாக கொளுத்தினார்கள். 1720 ஆம் ஆண்டில் மாயன் எழுத்துக்களை அறிந்த ஒருவர் கூட உயிருடன் இல்லை.

இதற்கு ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் பதில்? அவர்கள் லாண்டாவை கண்டித்தனர். அவர் கொலைகளை செய்ததற்காகவோ, மாயன் மக்களை சித்திரவதை செய்ததற்காகவோ, ஒரு நாகரிகத்தின் முழு கலாச்சாரத்தையும் அதன் வரலாற்று ஏடுகளை அழித்ததற்காகவோ கண்டிக்கவில்லை. மாறாக, டியாகோ டி லாண்டோவின் குற்றம், அவர் மத விசாரணையை ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் அனுமதியின்றி செய்ததற்காகத்தான்.

அதன் பிறகு 200 ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்து நாடுகளை சேர்ந்த நிபுணர்களும், மொழியியலாளர்களும், மானுடவியலாளர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும், கணிதவியலாளர்களும், கட்டட நிபுணரும், இன்னும் பல அறிவாளிகளும், ஒரு 12 வயது ஜீனியஸ் சிறுவனும் சேர்ந்து லாண்டோ செய்த அழிவை சரி செய்தார்கள். கடுமையாக உழைத்து விடாமுயற்சியுடன், மாயன் எழுத்து வடிவத்தை ஒவ்வொரு துளி துளியாக சேர்த்து, எழுத்து எழுத்தாக கண்டுபிடித்து அறிந்தார்கள். இந்த விடாமுயற்சி குழுவின் உன்னதமான வேலையால், ஏறத்தாழ 90 சதவீத மாயன் எழுத்துக்கள் இன்று அறியப்பட்டுவிட்டிருக்கின்றன.

லாண்டோ ஸ்பெயினில் சில வருடங்கள் வீட்டுச்சிறையில் இருந்தார். பிறகு அவர் யுகாடன் பகுதியின் பிஷப்பாக பதவி உயர்சு பெற்று மத்திய அமெரிக்காவில் தன் இறுதிக்காலத்தை கழித்தார்.

டேவிட் லெபர்ன், அமி ஹெல்பெம் லெப்ர்ன் அவர்கள் எடுத்த “Breaking the Maya Code” என்ற ஆவணப்படத்துக்கு மிக்க நன்றி.

Craig A. James is a writer, computer scientist, evolutionist, and movie producer. He lives in Southern California.

இணைப்பு

Series Navigationஇந்தியாவிலிருந்து சுரண்டிய பணத்தை பிரிட்டன் திரும்ப கொடுக்க முயற்சித்தால் முழு திவாலாக ஆகும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *