– அடையாறு காந்தி நகர் நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்றது –
சென்னை. அக்.29. சென்னை அடையாறிலுள்ள காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழாவும் ‘இதயத் தும்பி’ சிறுவர் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மூத்த பத்திரிகையாளர் தீபம் எஸ்..திருமலை தலைமையேற்றார்.கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்ரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன் கருத்துரை வழங்கினார். குழந்தை எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் புதல்வர் அழகப்பன், அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தைத் துவக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
‘இதயத் தும்பி’ சிறுவர் இதழை கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, ஆதித்யா வித்யாமந்திர் பள்ளி தாளாளர் பஞ்சமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற ’சிறுவர் உலகமும் கவிதையும்’ எனும் தலைப்பிலான கவியரங்கில் கவிஞர் மு.முருகேஷ் தலைமையில், கவிஞர்கள் பாலக்கிருட்டிணன் வண்ணமுத்து, மல்லிகை தாசன், துரை.நந்தகுமார், வானவன், ஜென்ஸி, இரா.நாகராஜன் ஆகியோர் கவிதை படைத்தனர்.
கவிஞர் இராய.செல்லப்பாவின் கவிதையை அவரது மகள் அர்ச்சனா, பேரன் ஸ்கந்தா ஜெய், பேத்தி சம்பிரதா ஆகியோர் பாடலாகப் பாடினர்.
குமாரராஜா முத்தையா அரசு மேனிலைப்பள்ளி, பள்ளிக்கரணை ஆதித்யா வித்யாமந்திர் பள்ளி மாணவ- மாணவிகளின் பாடல் மற்றும் உரையரங்கம் நடைபெற்றன.
விழாவில், குழந்தை எழுத்தாளர் காந்தலெட்சுமி சந்திரமெளலி, புதுகை இராஜேந்திரன், கு.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிறைவாக, நூலக வாசகர் வட்டத் தலைவர் வையவன் நன்றி கூறினார்.
படக்குறிப்பு :
சென்னை அடையாறிலுள்ள காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்ற அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழாவில்,‘இதயத் தும்பி’ சிறுவர் இதழை கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, ஆதித்யா வித்யாமந்திர் பள்ளி தாளாளர் பஞ்சமூர்த்தி பெற்றுக்கொண்டார். அருகில்,எழுத்தாளர்கள் வையவன், தீபம். எஸ்.திருமலை, ஆலந்தூர் கோ.மோகனரங்கன்,கவிஞர்கள் இராய.செல்லப்பா, குடந்தை பாலு ஆகியோர் உள்ளனர்.
- அதன் பேர் என்ன?
- வால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது
- உதவி செய்ய வா !
- அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழா
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018
- கேழல் பத்து