கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி.
பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன.
பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்
முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000
(அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000
(அமரர். திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (எழுத்தாளர் குறமகள்) ஞாபகார்த்தமாக)
மூன்றாவது பரிசு (இரண்டு எழுத்தாளர்களுக்கு) தலா இலங்கை ரூபாய்கள் – 20,000
(ஒன்று அமரர்களான திரு, திருமதி. தம்பியப்பா ஞாபகார்த்தமாகவும் மற்றையது அமரர். அதிபர் பொ. கனகசபாபதி (மகாஜனா) ஞாபகார்த்தமாகவும்)
ஏழு பாராட்டுப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000
(அமரர் அதிபர் அ. குருநாதபிள்ளை (நடேஸ்வரா) ஞாபகார்த்தமாக.)
ஐந்து ஊக்கப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 3000
( அமரர் தாவளை இயற்றாலை கணபதிப்பிள்ளை கந்தசாமி ஆசாரியார் ஞாபகார்த்தமாக. )
போட்டிக்கான விதி முறைகள்:
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அச்சுப் பதிவில் 1200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர், ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப முடியும். போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும். விதிமுறைகளுக்கு மீறிய கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
போட்டியில் பங்குபற்றும் எழுத்தாளர்கள் அனுப்பிவைக்கும் சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக அவர்களால் எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப் படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. போட்டிக்கான சிறுகதைகள் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக அவர்களது அரசியல் பொருளாதார சமூகம் சார்ந்த விடயங்களுக்குள் அமைவது வரவேற்கத்தக்கது.
சிறுகதைகள், மின்னஞ்சலில் பாமினி எழுத்துரு இணைப்பாக அல்லது யூனிக்கோட் எழுத்துருவில் மட்டும் அனுப்ப வேண்டும்.
போட்டிக்கு அனுப்பும் பிரதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது. சிறுகதைகள் எமக்குக் கிடைத்ததும் அது பற்றி எழுத்தாளருக்கு அறிவிக்கப்படும்.
எழுத்தாளர்கள் தங்களது சரியான பெயர், அவர்களது இருப்பிட முகவரி ஆகியவற்றை சிறுகதைகள் அனுப்பும் போது தனியாகக் குறிப்பிட வேண்டும்.
முடிவுகள் வெளிவரும்வரை போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளை, வேறு இதழுக்கோ, இணையத்திற்கோ, வலைப்பதிவுகளுக்கோ அல்லது வேறு போட்டிகளுக்கோ அனுப்பக்கூடாது.
பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்து தேர்ந்தெடுக்கும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியாகும்.
இந்தப் போட்டி தொடர்பான எவ்வித கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
போட்டிக்கான முடிவு திகதி பெப்ரவரி 28 ஆம் திகதி 2019. (கனடா நேரப்படி இரவு 12 மணி)
முடிவுகள் இணையத் தளத்திலும் பத்திரிகைகளிலும் ஏப்ரல் மாதம் 2019 இல் வெளியிடப்படும். பரிசு பெற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தரப்பட்டு, பணப்பரிசும் பாராட்டுப் பத்திரமும் அனுப்பி வைக்கப்படும்.
பரிசுக்கு தெரிவாகும் சிறுகதைகளை நூல் வடிவமாகவோ, அல்லது தொடர்பு சாதனங்களிலோ வெளியிடும் உரிமை, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு உரியது. போட்டிக்கான சிறுகதைகளை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: canadatamilwriters2019@gmail.com.
இணைய முகவரி https://canadatamilwritersassociation.blogspot.com
குரு அரவிந்தன் ஆர்.என். லோகேந்திரலிங்கம்
தலைவர் செயலாளர்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
- அதன் பேர் என்ன?
- வால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது
- உதவி செய்ய வா !
- அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழா
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018
- கேழல் பத்து