அமரந்த்தாவின் சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்

This entry is part 7 of 9 in the series 2 டிசம்பர் 2018

தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களான நிழல்களின் உரையாடல் என்ற மார்த்தா த்ராபாவின் நாவல் மற்றும் சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற தலைப்பிலான 33 லத்தீன் அமெரிக்க சிறுகதைகளடங்கிய நூல் (தொகுப்பும் மொழிபெயர்ப்பும் அமரந்த்தா) ஆகியவை குறித்த திறனாய்வுக்கூட்டம் நடந்தேறியது.

 

 

நிழல்களின் உரையாடல் என்ற புதினம் குறித்து திரு. வீ.அரசு மிக விரிவான, செறிவான உரையாற்றினார். லத்தீன் அமெரிக்க இலக்கியம், அரசியல் குறித்த வரலாற்றுப் பின்னணிகளையும், லத்தீன் அமெரிக்க இலக்கியம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகளையும் அவற்றின் தாக்கத்தையும் அவருடைய உரை முன்வைத்தது.

 

 

அமரந்த்தாவின் ஏற்புரை  லத்தீன் அமெரிக்க அரசியல், இலக்கியம் குறித்து அவருக்குள்ள ஆழ்ந்த அறிவையும் அபிமானத்தையும் வெளிப்படுத்தியது. திறனாய்வுக்கூட்டத்தை மார்க்ஸ் நூலகத்தார் பயனுள்ளவிதத்தில் நடத்தினார்கள். கூட்டத்தில் நிழல் திருநாவுக்கரசு, ஜமாலன், பொன் தனசேகரன், வெளி ரங்கராஜன், அ.ஜ.கான், போன்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் – சிறுபத்திரிகையாளர்கள்  கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் யூட்யூபில் ஒலிவடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

1) V.Arasu’s speech on Nizhalgalin Uraiyaadal(Amarantha’s translation) – Youtube link

https://www.youtube.com/watch?v=KyblOGjNijQ

2) Latha Ramakrishnan’s speech on SORGATHIN ARUGILIRUNDHU VANDHAVAN

(Latin American Short-stories in Tamil – Translated by Amarantha)

https://www.youtube.com/watch?v=jNciHC-VIpQ

(3)Amarantha’s acceptance speech – youtube link

https://www.youtube.com/watch?v=4CDC0_M5Ef4

Series Navigationகற்பனை மாத்திரைஅமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *