Pusher Trilogy

This entry is part 6 of 8 in the series 5 மே 2019

நாமெல்லாம் அறியாததொரு உலகம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது என்பதினை நம்மில் பலர் உணர்வதில்லை. போதைமருந்தும், விபச்சாரமும், வன்முறையும், கொலைகளும் நிகழும் மேற்கத்திய உலகத்தைப் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இந்திய மனோபாவம் அடிப்படையில் வம்பு தும்புகளிலிருந்து விலகியிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

நாமறியாத அந்த வன்முறையைக் காட்டும் நூற்றுக்கணக்கான மேற்கத்திய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் அதில் உச்சமாக நான் கருதும் திரைப்படங்களில் ஒன்று Pusher Trilogy என்றழைக்கப்படும் மூன்று நார்வேஜிய திரைப்படங்கள்தான். மூன்று திரைப்படங்களாக வெளியிடப்பட்ட Pusher திரைப்படங்கள் நார்வேஜிய வன்முறை, போதை மருந்து கடத்தும் கும்பல்களைப் பற்றியவை. ஏறக்குறைய ஒரே விதமான கதைகள் என்றாலும் எடுக்கப்பட்ட விதத்தில் வித்தியாசமானவை.

அதிலும் Pusher III – The Angel of Death தவறவிடப்படக் கூடாததொரு திரைப்படம் என்பேன். நார்வேயில் கோலோச்சும் அரேபிய, பாகிஸ்தானிய போதை மருந்து கடத்தல் கும்பலிலிருந்து, முன்னாள் சோவியத்யூனியன் நாடுகளிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டு விபச்சாரம் செய்வதற்காக விற்பனை செய்யப்படும் வெள்ளைக்கார இளம்பெண்கள், எதிர்பாராத விதத்தில் நொடிப்பொழுதில் நடக்கும் கொலைகள் என நாமறியாத பல பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் திரைப்படம் அது.

அந்த மாதிரி வன்முறை நிறைந்த சினிமாவைப் பார்க்க விருப்பமுள்ள, வாய்ப்புக் கிடைப்பவர்கள் மூன்றையும் பார்க்க சிபாரிசிக்கப்படுகிறது. யூ-ட்யூபில் கிடைக்கக்கூடும். நான் பார்த்து நான்கு வருடங்களுக்கும் மேலிருக்கும். அமேசான் பிரைமில் கிட்டலாம்.

https://youtu.be/-HZHbCzr8M4
Series Navigation‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’Ushijima the Loan Shark
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *