மஞ்சுளா
யாரிடமும்
எதைச் சொன்னாலும்
குறைத்துச்
சொல்ல வேண்டாம்
அதிகம் சொல்லிக்கொள்வது
ஆபத்து
என்றும்
நினைத்து விட வேண்டாம்
அதிகம் சொல்லிக்கொள்ளும் போது
குறைவாக உதடசையுங்கள்
உதடுகள் இணைப்பது
சொற்களை
உங்களையும் என்னையும்
அல்ல
உதடுகள் பிரியும் போது
தெறித்து விழும்
சொற்களின் மீது தான்
அதிக கவனம் வைத்து
விடுகிறார்கள்
எதிரே இருப்பவர்கள்
அவர்களுக்கும் இருக்கின்றன உதடுகள்
இருக்கிய உதடுகளை
அவர்கள் பிரிக்க கூடும்
முக மூடிகளை கழற்றி
வீசி எறியக்கூடும்
பதிலுக்கு காத்திருக்கின்றன
உங்கள் முக மூடிகள்
சண்டையிட்டு
பிரிந்து விடும்
முகமூடிகள் மீது
காறி உமிழ்ந்தபடியே
இருக்கின்றன
சொற்கள்
மனித உதடுகளின்றி !
-----மஞ்சுளா
மதுரை
- இளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் போராட்டங்கள் – சிறைவாழ்க்கை
- விருதுகள்
- சொற்களின் வல்லமை
- புதுப்புது
- போதுமடி இவையெனக்கு…
- நிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.
- அப்படித்தான்
- தீர்ப்பும் விசாரணையும்
- கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்
- குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்
- பொருள்பெயர்த்தல்
- செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16