FEATURED
Posted on June 15, 2019Video Player00:0000:05
[ கட்டுரை – 3 ]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++++++++++
- https://youtu.be/-pZVPux-bzs
- https://youtu.be/6ae4GZ9t6Vs
- https://youtu.be/c_gVEZi_xSc
- https://www.fairewinds.org/nuclear-energy-education/new-tepco-report-shows-damage-unit-3-fuel-pool-much-worse-unit-4
முதன்முதல் யூனிட் -3 இன் கதிரியக்க அணு உலை எரிக்கோல்கள் நீக்கப் பட்டன.
- https://gizmodo.com/nuclear-fuel-rod-removed-from-stricken-fukushima-reactor-1834048278 [April 15, 2019]
2019 ஏப்ரல் 15 டெப்கோ [TEPCO] [Tokyo Electric Power Company] பொறியியல் நுணுக்கவாதிகள் முதன்முதல் தூர இயக்குச் சாதனங்களைப் பயன்படுத்தி புகுஷிமாவின் சிதைந்த யூனிட் -3 அணு உலைத் தடாகத்தில் உள்ள தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்களை எடுத்து அப்புறப்படுத்த ஆரம்பித்தார். அந்த சேமிப்புத் தடாகத்தில் இருந்த எரிக்கோல்க/ள் : 566. அனைத்து எரிக்கோல்களை நீக்க 2021 மார்ச்சு இறுதிவரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்துச் சிதைந்த யூனிட் 1 & 2 கதிரியக்க எரிக்கோல்களை 2023 ஆண்டில் நீக்க, டெப்கோ திட்ட மிட்டுள்ளது. ஜப்பான் அரசாங்கம் அனைத்து கதிரியக்கக் கழிவுகளை நீக்கி, நிலத்தைத் துப்புரவாக்கி, புகுஷிமா தளத்தை சீக்கிரம் மீட்டுவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதற்கு இரு ஆதாரங்கள் : 1945 இல் அணு குண்டுகள் தாக்கி நாசமான பிறகு, தற்போது புதுப்பிக்கப்பட்டு மக்கள் நடமாடி வசிக்கும் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள்.
++++++++++++++
- http://afterfukushima.com/tableofcontents
- http://afterfukushima.com/book-excerpt
- https://youtu.be/YBNFvZ6Vr2U
- https://youtu.be/HtwNyUZJgw8
- https://youtu.be/UFoVUNApOg8
- http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
- https://youtu.be/_-dVCIUc25o
- https://youtu.be/kBmc8SQMBj8
- https://www.statista.com/topics/1087/nuclear-power/
- https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
- https://youtu.be/ZjRXDp1ubps
- https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf
முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் வழியே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் பல தகர்ந்து போயின. சுமார் 18,000 பேர் உயிரிழந்தனர். மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை. சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் சிதைந்த நான்கில் மூன்று அணுமின் உலை களின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, உருகி, இறுகிப் பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன. அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன. அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார். நான்கு அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் பல அணுமின் உலைகள் நிறுத்த மாகி 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.
கடல் உப்புநீர் கரையேறி, கவசச் சுவர் தாண்டினும் அணு உலைக் கட்டடம் தப்பி, டர்பைன் கட்டடங்கள் உள்ளே புகுந்து விட்டது. நிறுத்தமான யூனிட் 1, 2, 3 மூன்றிலும் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீரின்றி, அணு உலையில் உள்ள எரிக்கோல் கள் கனல்மீறி உருகிப் போயின. நிறுத்தமாகி இருந்த யூனிட் -4 வெடிப்பில் சிதைவானது. யூனிட் 4, 5, 6 மூன்றிலும் அணு உலை எரிக்கோல்கள் உருகவில்லை. 2014 டிசம்பரில் யூனிட் -4 சேமிப்புத் தடாகத்தில் இருந்த தீய்ந்த யுரேனிய எரிக்கோல்கள் [1535] நீக்கப்பட்டன.
உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை. ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படு கின்றன. அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.
கட்டுரை ஆசிரியர்
தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது ! ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.
உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்
2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன் வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை. அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.
- புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
- அவற்றுள் முக்கியமானவை : அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.
As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.
Country | IN OPERATION | UNDER CONSTRUCTION | ||
Number | Electr. net output MW | Number | Electr. net output MW | |
Argentina | 3 | 1.632 | 1 | 25 |
Armenia | 1 | 375 | – | – |
Belarus | – | – | 2 | 2.218 |
Belgium | 7 | 5.913 | – | – |
Brazil | 2 | 1.884 | 1 | 1.245 |
Bulgaria | 2 | 1.926 | – | – |
Canada | 19 | 13.524 | – | – |
China | 36 | 31.402 | 20 | 20.500 |
Czech Republic | 6 | 3.930 | – | – |
Finland | 4 | 2.752 | 1 | 1.600 |
France | 58 | 63.130 | 1 | 1.630 |
Germany | 8 | 10.799 | – | – |
Hungary | 4 | 1.889 | – | – |
India | 22 | 6.225 | 5 | 2.990 |
Iran | 1 | 915 | – | – |
Japan | 43 | 40.290 | 2 | 2.650 |
Korea, Republic | 25 | 23.133 | 3 | 4.020 |
Mexico | 2 | 1.440 | – | – |
Netherlands | 1 | 482 | – | – |
Pakistan | 4 | 1.005 | 3 | 2.343 |
Romania | 2 | 1.300 | – | – |
Russian Federation | 36 | 26.557 | 7 | 5.468 |
Slovakian Republic | 4 | 1.814 | 2 | 880 |
Slovenia | 1 | 688 | – | – |
South Africa | 2 | 1.860 | – | – |
Spain | 7 | 7.121 | – | – |
Sweden | 10 | 9.651 | – | – |
Switzerland | 5 | 3.333 | – | – |
Taiwan, China | 6 | 5.052 | 2 | 2.600 |
Ukraine | 15 | 13.107 | 2 | 1.900 |
United Arab Emirates | – | – | 4 | 5.380 |
United Kingdom | 15 | 8.918 | – | – |
USA | 99 | 98.868 | 4 | 4.468 |
Total | 450 | 391.915 | 60 | 59.917 |
Nuclear power plants world-wide, in operation and under construction, IAEA as of 27 November 2016
அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்
புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு. அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு ! பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை. இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60. அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155. எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338. புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய். முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.
- https://youtu.be/CPeN7GhTpz4
- https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
- https://youtu.be/4YgmCu7dfS4
- https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
- https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
- https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
- https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
- https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
- https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
- https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10
- https://en.wikipedia.org/wiki/Fukushima_Daiichi_units_4,_5_and_6
- https://www.theguardian.com/world/2019/apr/15/fukushima-removal-of-nuclear-fuel-rods-from-damaged-reactor-begins
- https://learningenglish.voanews.com/a/fukushima-plant-begins-removing-fuel-from-melted-reactor/4876487.html
- https://daily.jstor.org/how-to-clean-up-after-a-nuclear-disaster/
- http://world-nuclear-news.org/Articles/IAEA-reports-on-progress-at-Fukushima-Daiichi
- https://www.cnet.com/features/for-fukushimas-nuclear-disaster-robots-offer-a-sliver-of-hope/
++++++++++++++++++++++
- நியாயங்கள்
- கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)
- புகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன
- மனப்பிராயம்
- சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’
- மீட்சி
- ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….
- நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”
- முதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி