கு.அழகர்சாமி
எதனின் நீந்த மறந்திருந்த-
அதனின் நட்சத்திர மீன்
நீந்த
ஆரம்பிக்க-
எதனின் இறந்து உலர்ந்திருந்த-
அதனின் கடற் குதிரை
மிதந்து மேல்
தலை நீட்ட-
எதனின் உதிர்ந்த
பல்லோ-
அதனின் குதிரை
கனைத்துக் கிளம்ப-
எதனின் கயிறு கட்டிப் போட்ட-
அதனின் படகு
கயிறறுத்து
கடலில்
பயணிக்கத் தொடங்க-
அதில்
கிடந்த எதனின் முதுகெலும்போ- அதனின்
டால்ஃபின்
கடலில்
துள்ளிக் குதிக்க-
வேடிக்கை பார்க்கும் எதனின்
நான்-
அதனின் குரங்கை
விநோதாமாய்த்
தேட-
எதனின் மறைகின்ற இன்றைய சூரியன் –
அதனின் ஆயிரமாயிர ஆண்டுகள் முன் புரண்ட
அலைகளின் கடலின் சூரியன்
மறையாமல்
ஒளிர-
ஒளிர்ந்தது
காணாமல் போன ஒரு
உலகம்.
கு.அழகர்சாமி (galagarsamy@yahoo.co)
- இரங்கற்பா
- கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்
- அருங் காட்சியகத்தில்
- மொழிப்போர்
- கானல் நீர்
- கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!
- எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின் புதிய கவிதைத்தொகுப்பு
- சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்