எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின் புதிய கவிதைத்தொகுப்பு

This entry is part 7 of 8 in the series 30 ஜூன் 2019

(50 குறுங்கவிதைகள் – (ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு)

இப்போது அமேஸான்கிண்டில் மின் நூல் வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு AMAZON PAPAERBACK வடிவிலும் வெளிவந்திருக்கிறது!

விரைவில் ANAAMIKAA ALPHABETS வெளியீடாக இருமொழித் தொகுப்பாக வழக்கமான நூல்வடிவி லும் கிடைக்கும்)

Kindle Price (US$): $1.89
Kindle Price (INR): Rs. 138.00
includes free international wireless delivery via Amazon Whispernet

ANTS’ BRIGADE: Poems by Booma Eswaramoorthy(A Renowned Tamil Poet rendered in English) 
AMAZON PAPERBACK EDITION – June 28, 2019
by BOOMA ESWARAMOORTHY (Author), 
LATHA RAMAKRISHNAN (Translator)
________________________________________
• Paperback 
$6.001 New from $6.00
• 
https://www.amazon.com/dp/1076925200/ref=sr_1_2…

NO LAURELS NEEDED FOR LOVE AND POETRY
Booma Eswaramoorthy
No laurels are required for Love and Poems. Yet, we admire and applaud. Heart can never be alone. The very nature of heart is to hold on to something; somebody. After internalizing Love, Art and Literature come closer. When Love flows without blockades, wholesomely in the body and mind poesy becomes consummate. Love that does not love just itself has the possibility of blooming.

கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி:

அன்பிற்கும் கவிதைகளுக்கும் புகழ்மொழி தேவை யில்லை. என்று கூறும் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி யின் இயற்பெயர் ஈஸ்வர மூர்த்தி. எழுபதிலேயே எழுதத் துவங்கி யிருந்தாலும் எண்பதின் கவிஞராகவே அடையாளம் காணப்பெறுகிறார். வங்கிப் பணியி லிருந்து ஒய்வு பெற்று தற்போது கர்நாடக மாநில பெங்களூரில் வசித்து வருபவர். எண்பதுகளில் வெளியான இவரது “காதலை காதலென்றும் சொல்லலாம்“ என்ற தொகுப்பின் வழியே அழுத்தமான பிம்பம் பெற்றவர். இதுவரை ஒரு சிறுகதை தொகுப்பு உள்பட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துவிட்டன.

எளிய வார்த்தைகளில் அர்த்த செறிவும் தத்துவ ஒளி யும் சொல் கடந்த கவிதானுபமும் தருபவர். மென் உணர்வுகளையும் அதற்கு பங்கமேற்படும் போது நிகழும் காயங்களையும் பதிவு செய்பவர்.

குறிப்பிடத்தக்க நவீன தமிழ்க்கவிஞர்களில் ஒருவர் பூமா ஈஸ்வரமூர்த்தி. இவருடைய கவிதைகள் மனித மனதின் சலனங்களை ஒரு விலகிய பார்வையுடன் நிதானமாய் அலசியாராயும் இயல்புடையவை. இவரு டைய நீள்கவி தைகளும் சரி, குறுங்கவிதைகளும் சரி, தேவைக்கு அதிக மான வார்த்தைகளையோ வரிகளையோ பிரக்ஞாபூர்வ மாகத் தவிர்ப்பவை. அதே போல் கவிதையோ, கதையோ, கட்டுரையோ – இவருடைய புனைவாக்கங் கள் வாழ்க்கையைக் குறித்த விசாரணைகளைக் கொண்டவை. வாழ்க்கை யின் சாதாரண நிகழ்வுகளிலும் கிடைக்கும் ‘தரிசனங்’க ளைக் கவனப் படுத்துபவை.

தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் சில:

இலைகள் இல்லை
கிளைகள் தென்படவில்லை
கிளைகள் பூக்களால்
நிரம்பியிருக்கிறது

பூக்களின் நிழலில் நான்

No leaves
branches not seen
the branches are 
brimming with blossoms

beneath the shade of blossoms
I am

Ø
உங்கள் உடலை பாடம் பண்ண
வேண்டுமா எரியூட்ட வேண்டுமா
புதைக்க வேண்டுமா என்கிறார்கள்

காணாமல் போகவேண்டும்
என்கிறேன்

Are we to embalm your body
or cremate it or bury it
Ask they

Should disappear
I declare

Ø

மழை இரவில் பௌர்ணமி
தெரியுமா என்கிறார்கள்

பௌர்ணமி ஒரு மழை
என்கிறேன்

Ø

Can full moon be seen on a rainy night
they muse

Full moon is a Rain 
I deduce.

Series Navigationகவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *