மஞ்சுளா
ஒரு கணத்தில்
வாழ்வின் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டேன்
காற்று சுதந்திரமாக
சிரித்து விலகியது
அதன் ஒலிகள்
கேட்கப்படுமுன்
கதவுகள் மூடப்பட்டன
சிறகுகளை வைத்து
சித்திரம் பழகினேன்
அதன் கைகளிலோ
ரத்தச் சிதறல்கள்
காற்று தீண்டாததால்
கால் கொலுசுகள்
புழுங்கிக் கொண்டிருந்தன
மனோ வேகமோ
வெப்ப அலைகளில்
அதிர்ந்து கொண்டிருந்தது
செறிந்த அதிர்வுகளால்
காற்று செல்லமாய்
தட்டியது என் கதவை
கதவுகள் இல்லாத யுகமோ
தன்னை தயார் செய்து கொண்டே
விரைகிறது நம்மை நோக்கி
— மஞ்சுளா மதுரை
- ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது
- கதவு
- அரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்
- அற்புதம்
- குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’
- செம்மொழித்தமிழில் அமைதி இலக்கியம்
- கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா
- குழந்தைகளும் கவிஞர்களும்