பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!

This entry is part 2 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

லதா ராமகிருஷ்ணன்

விஜய் தொலைக்காட்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் தொடர்நாடகத் தில் கடந்த வெள்ளியன்று திடீரென்று நாடகக் காட்சிகளின் மீது அவ்வப் போது பாம்பு ஊர்வதாய் ஒரு வாக்கியம் வழுக்கிக்கொண்டு சென்றது. அந்த வரியின் சாராம்சம் இதுதான்.

‘இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குநிகழ்ச்சி. நாங்கள் எந்தவிதத்திலும் மூடநம்பிக்கைகளுக்குத் துணைபோகிறவர்கள் அல்ல.

பகுத்தறிவாளர்கள் சேனல்களில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் கடவு ளுக்கு இடமிருக்கிறதோ இல்லையோ(எல்லா நாடகங்களிலும் மருத்துவ மனை, கோயில், சிறை என்று சில இடங்கள் கண்டிப்பாக இடம்பெறும். மருத்துவமனை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அம்போவென்று திறந்தி ருக்கும் – பாதுகாவலர்கள் இருக்கவே மாட்டார்கள். எந்தக் கதாபாத்திரமும் உள்ளே சென்று மருத்துவராக, செவிலியாக, நோயாளியாக என எப்படி வேண்டுமானாலும் உருமாறி எல்லாவிதமான அக்கிரமங்களையும், குளறுபடிகளையும் செய்வார்கள்.

இது எல்லாச் சேனல்களிலும் வழக்கமாக இடம்பெறும் காட்சிகள்

அரண்மனைக் கிளி என்ற அந்தத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் வசனங்களும் காட்சிகளுமே.

அதில் கதாநாயகனாக – கதாநாயகியாக நடிப்பவர்கள் அருமையாக நடிக்கிறார்கள். அதுவே நாடகத்தைப் பார்ப்பதற்கான காரணம்.

நடக்கமுடியாத கணவனை நடக்கவைக்க நாயகி தீமிதிக்கிறாள், குகைக்கோயிலுக்குச் செல்கிறாள், புதைசேறில் அமிழ்கிறாள்.

நாயகனுக்கு அவளைப் பிடிக்கிறது. ஆனாலும் அம்மாவை எதிர்த்துப் பேசமுடியாதாம். நடக்கமுடியாது; நியாயத்தைப் பேசக்கூடவா?

நாடகத்தின் ஆரம்பத்திலேயே எஜமானியம்மாவின் பையனைக் கல்யாணம் செய்துகொள்ளப் பிடிக்காமல் பணியாளின் மகள் போய்விட, பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அவளுடைய தங்கையை மனைவியாக்கிவிடு கிறார் அந்த நாயகனின் பணக்காரி அம்மா. ஆனால், அவளைப் பற்றி யாரும் போலீஸில் புகார் தருவதில்லை.

இப்படியே போகிறது கதை.

இப்போது வாசுகிப் பாம்பு வந்து கதாநாயகன் காலை இறுக்கச் சுற்றினால் கால் வந்துவிடும் என்ற கட்டத்திற்குக் கதைவந்திருக்கிறது. இப்போதுதான் இந்த பகுத்தறிவு வாக்கியமும் பாம்பாய் ஊர்கிறது.

சேனலின் கூற்றுப்படி பொழுதுபோக்கென்றால், பகுத்தறிவுக்கொவ்வாத எதையும் காட்டலாமா? என்ன அபத்தமான வாதம் இது?

ஏற்கெனவே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட்டு பத்து சதவிகிதம் என்றால் நகைச்சுவை என்ற பெயரில் ஆங்கிலம் பேசத்தெரியா தவர்களை கேலி செய்வதும், ஆபாசமாக ஜோக் அடிப்பதும் 90 சதவிகித முமாக எல்லைமீறிப்போய்க்கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது எதிர்ப்பு வந்தால் உடனே இப்படி இலட்சியவாதிகளாய் வாக்கியங் களைப் போடுவார்கள். அல்லது, ஒன்றிரண்டு மாற்றுத்திறனாளிகளை நிகழ்ச்சிக்குள் நுழைப்பார்கள். பிறகு எதிர்ப்பு அடங்கியதும் பழையபடி  பொழுதுபோக்கு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துகளை நாடகங்கள், மற்ற நிகழ்ச்சிகளில் கொட்டத்தொடங்கிவிடுவார்கள்.

இரவு இரண்டு மணிக்குக்கூட கெட்டி ஜரிகை புடவையும், காதில் தங்க- வைர அண்டான் தொங்கட்டான்களுமாக சதா முக்கால் முதுகு தெரிய சட்டையணிந்த பெண்களையே காட்டியவண்ணமே பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணை போகப்பொருளாக்கலாகாது என்று வசனம் பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சேனல்கள் உண்மையில் பெண்-விரோதிகள்; பகுத்தறிவு-விரோதிகள்.

  •  
Series Navigationஇராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *