நிலாரவி
மழைத் தாகம் கொண்டு
வறண்டிருந்த நிலத்தில்
அமிலமழை பொழியும்
வானம்
கருகிய பயிர்களின்
இடுகாடுகளாய்
நேற்றைய நிலங்கள்
பூமியின் நுரையீரலில்
புகைநிரப்பும்
புகைப் போக்கிகள்
நிலத்தின் வயிற்றில்
ஆழமாய் தோண்டப்படும்
சவக்குழிகள்
சவக்குழிகளில்
முளைத்து நிற்கும்
கான்கிரீட் கூடுகள்
கூடுகளில்
குஞ்சு பொரிக்கும்
பறவைகள்
மரங்களைத் தின்றுவளரும்
கான்கிரீட் கல்வனங்கள்
தானியங்களை
சேகரிக்கும்
அருங்காட்சியகங்கள்
தானியங்கிகளின்
வெள்ளாமையில்
விளையும்
நெகிழித் தீவனங்கள்
சாம்பல் பூக்களின்
நிலத்தில்
ராஜாளிகளாகும்
குருவிகள்.
நிலாரவி.