சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

author
1 minute, 14 seconds Read
This entry is part 8 of 10 in the series 10 நவம்பர் 2019

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ (  வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்… பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன்   . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர்     மாதக்கூட்டம் ...03/11/19 ஞாயிறு மாலை.5 மணி..                     ., பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலையில் நடைபெற்றது.

சுப்ரபாரதிமணியன் உரையில் ;;

அண்டை வீடு : பயண அனுபவம் :

        திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த இலக்கு 2020இல் சாத்தியமாகும் என்று 5 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டது .( 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்ற கன்வைப்பற்றி அப்துல் கலாம் அப்போது பேசிக் கொண்டிருந்தார் )ஆனால் தற்போது அடைந்துள்ள சில பின்னடைவுகளால் அது இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளி போய் உள்ளது.திருப்பூர் நிச்சயம் அதை எட்டும்.

 சமீப ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்கு சவாலாக இருந்து வரும் நாடு வங்கதேசம் .அந்த நாட்டில் மேம்பட்டுள்ள  பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு சில ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பூரிலிருந்து வங்கதேசம் சென்றது. அந்த குழுவில் தொழிற்சங்க பிரமுகர்கள்அரசியல்வாதிகள்தன்னார்வ குழுவினர் என்று இருந்தனர் .அந்தக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன் .அந்த பயண அனுபவம் தான் இந்த நூல்.

திருப்பூருக்கு போட்டியாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக இருந்திருக்கிறது  வங்கதேசம். இந்த ஆண்டில் சில பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. அதற்கு காரணம் வங்கதேசத்தின் அதிவிரைவு முன்னேற்றம் அதிகப் பெண்களின் உழைப்பிலான பின்னலாடை ஏற்றுமதியில் என்பதால் உலக நாடுகளின் கவனத்திற்கு அந்த நாடு சென்றது .ஆனால் உலக நாடுகள் நியாய வணிகம்கார்ப்ரேட் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றை கருத்தில்  கொண்டு பல கேள்விகளை எழுப்புகின்றன. சமீபத்தில் நடந்த சில பின்னலாடை தொழில் விபத்துகள் அவர்களின் கவனத்திற்கு சென்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில்  ஐந்து பின்னலாடை தொழிலகங்களைக் கொண்ட ராணா பிளாசா கட்டிடம் விபத்தில் இடிந்து போனது.  1500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதே ஆண்டில் டாக்காவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஆடைத் தொழிலில் பணிபுரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனார்கள். இந்த இரண்டு விபத்துகளுக்கு பின்னால் அங்குள்ள தொழிலாளர் நிலை குறித்து உலக நாடுகள் தங்கள் கவனத்தை எடுத்துக் கொண்டன.  தொழிலாளர் நலன் பாதுகாப்பு,  தொழில் பாதுகாப்பு பின்னலாடை தொழில் துறை இடப்பாதுகாப்பு தொழில் இடம் ,தொழிலாளர்கள் வாழ இணக்கமானச் சூழல்தொழிலாளர் உரிமைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு தயாராக வங்க தேசம் இல்லை.  தொழில்தொழிலாளர் பாதுகாப்புத்தன்மை ஆகியவற்றில் வங்கதேசம் பின்னடைந்து இருப்பதை உலக நாடுகள் கண்டறிந்தனர். அந்த வகையில் ஆடை ஏற்றுமதியில் வங்கதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது வங்கதேசம் ஆடை தொழில்துறை 84 சதவீத பங்கு வகிக்கிறது. ஆனால் உள்நாட்டு மொத்த உற்பத்தி என்பதில் ( ஜிடிபி ) அதன் பங்களிப்பு குறைந்திருப்பது ஆரோக்கியமான நிலையல்ல  என்றும் கருதப்படுகிறது. காரணம் அங்கு உள்ள தொழிலாளர்கள் குறித்தத் தீவிரமான முறையிலான  அக்கறையின்மைநதிகளின் சீரழிவுசாயப்பட்டறைகளின் நிலத்தடி நீர் மாசு போன்றவை புதிய முதலீடு போடுவதற்கு உலகநாடுகள் தயங்கும்படி செய்தன. மற்றும் சர்வதேச நிறுவனங்களால் பின்னல் ஆடை  சார்ந்த விலை குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி வருவாயில் அங்கு குறைவு ஏற்பட்டு இருக்கிறது .தீவிபத்துகள் மற்றும் கட்டட பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு அளவுகோல்கள் அவ்வளவு தீவிரமாக  இல்லை என்றும் சொல்லப்படுகிறது. .நெருக்கடிமிக்க துறைமுகம்,  அது சார்ந்த தொழில் கட்டமைப்பு வசதி குறைபாடுகள் அங்கே நிறைய இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை கொண்டு சேர்க்கிற விதத்தில் பல வகை பின்னடைவுகளும் உள்ளன.தொழிலாளர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி மைய செயல்பாடுகள் தீவிரமாக இல்லாமல் அந்நிய முதலீட்டை குறைத்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசம் ஏதோ ஒரு வகையில் திருப்பூருக்கு போட்டியாக இருந்தது .ஆனால் சமீப ஆண்டுகளில் திருப்பூரில் உள்ள தொழில் பாதுகாப்பு அம்சங்கள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை ஒப்பிடுகையில்  அப்படி வங்கதேசத்தில் இல்லாததால் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சரிவை  வரும் ஆண்டுகளில் திருப்பூர் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .அந்த வங்கதேசத்துப் பயணம் பின்னலாடைத் தொழில் சார்ந்த பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆதாரமாக  இருந்தது.

நாவலாசிரியரும், பேராசிரியருமான ஜீவா உரையில் :

” இந்திய சமூகத்தில் நிரந்தர நோயாளிகளாகக் காணப்படும் பெண்கள் நிலையை வெளிப்படுத்த பெண் எழுத்து அவசியமாகிறது.  விடுதலை பெற பெண்கள் எழுதுவது ஒரு ஆயுதமாகப் பயன்படும். பழைய இலக்கியம் பெண்களை அழகிகளாகவும் போகப் பொருட்களாகவும் காட்டியபோது இன்றைய இலக்கியமே அவர்களின் உண்மையான நிலையைக் காட்டுகிறது. யதார்த்த வகை எழுத்து பெண்ணிற்கு பலம்.. ..சுடுகாட்டில் பறந்தலையும் வண்ணத்துப்பூச்சிகளாக பெண்கள் பல விதங்களில் உழல்கிறார்கள் “ என்று நாவலாசிரியரும், பேராசிரியருமான ஜீவா ( நாகர்கோவில் ) ஞாயிறு திருப்பூர் இலக்கியக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.  யாழினிஸ்ரீயின்                   “ மரப்பாச்சியின் கனவுகள் “ ( கவிதை நூல் ) நூலைஅறிமுகப்படுத்திப் பேசினார்.             ( யாழினிஸ்ரீ மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பைச் சேர்ந்தவர் . முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு முடமாக்கப்பட்ட 33 வயது இளம் பெண்  என்பதும் இரு விரல்களால் கணிணி மூலம் கவிதைகள் எழுதுவதும்  குறிப்பிடத்தக்கது. ) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர்     மாதக்கூட்டம் ...03/11/19 ஞாயிறு மாலை.5 மணி..                     ., பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலையில் நடைபெற்றது.

*   நூல்கள் வெளியீடு :

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ (  வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்… பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன்   

* கோவை இர. மணிமேகலையின் “ பக்கத்து இருக்கை “ ( கவிதை நூல்)

நூலை ராமன் முள்ளிப்பள்ளம் வெளியிட்டார்.கண்ணம்மாள் பெற்றுக் கொண்டார் .

சுப்ரபாரதிமணியன் ஏற்புரையில் ” பயணங்கள் மனிதனுக்கு  இறுக்கத்திலிருந்து மனதைத் தளத்துவது. பயணங்கள் மூலம் வெவ்வேறு பண்பாடுகள் ,கலாச்சாரம் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அனுபவங்களால் நிறைவது பயணங்கள்”  என்றார்

திருப்பூர் குணா: தமிழ்மொழி மக்களுக்கு எதுவும் செய்யாது என்ற மோசமான பொதுப்புத்தி வளர்ந்து வருவது ஆரோக்யமானதல்ல. முதலாளித்துவ மனப்பான்மையே அதற்குக் காரணம்

மைசூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம் பேசுகையில்           முற்போக்குக் கருத்துக்களும் சீர்திருத்தக்கருத்துக்களும் இருந்தால் மட்டுமே ஒரு மொழியின் இலக்கியங்கள் நிலை பெறும். இல்லையெனில் அம்மொழியும் அழியும். இது உலக வரலாறு.  சமூக மாற்றங்களை, சமூக வெளிப்பாடுகளைக்  கொண்ட  வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்களே உலக அளவில் எப்போதும் பேசப்பட்டிருக்கின்றன. அவ்வகை இலக்கியங்களை இளைஞர்கள் கற்பதே அவர்களைச் சிறந்த வழிகாட்டிகளாக உருவாக்கும்”  என்றார்

*  கீழ்க்கண்ட நூல்கள்  அறிமுகம் நடைபெற்றன  .:  

* துருவன்  பாலாவின்                                                     “ மரணப்படுக்கையில் நெபுலாவின் குழந்தை “     ( கவிதை நூல்) –பேராசிரியை குமரன் கல்லூரி தமிழ்த்துறையச் சார்ந்த பிரவிணா

* பூ அ. இரவீந்திரனின் “ மரபுத்தோட்டம் “ ( கவிதை நூல்) –மணிகண்ட பிரபு

* திருப்பூர் யோ.சிரஞ்சீவியின் “ உள்ளம் தொடும் உச்சி “ ( கவிதை நூல்)

* திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகத்தின் மூன்று நூல்கள்

-யாழினிஸ்ரீயின் “ மரப்பாச்சியின் கனவுகள் “ ( கவிதை நூல் )

-ராமன் முள்ளிப்பள்ளம் அவர்களின் “ மீன் வதைத் தடைச் சட்டமும் மன்னனின் நான்காம் மனைவியும் “ (  சிறுகதைத் தொகுப்பு )

– திருப்பூர் குணாவின் “ மோ(ச)டி வளர்ச்சி-பொருளாதார வீழ்ச்சி- பிரசாந்த் கிஷோர் சூழ்ச்சி ( கட்டுரை ) ஆகியவிஅ பற்றிய விமர்சன உரைகள் வழங்கப்பட்டன.

* நூல்கள் வெளியீட்டில்/ அறிமுகத்தில் :, மணிகண்ட பிரபு ,சி. ரவி, பேரா. பிரவிணா,   சி. தமிழன்பன், இர.மணிமேகலை, ஜீவா.. பங்கு பெற்றனர். சசிகலா நன்றி கூறினார் * மற்றும்…பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன .

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்…திருப்பூர் 2202488

Series Navigation7. தோழி வற்புறுத்தபத்துமழைப்பருவத் தொடக்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *