கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.

This entry is part 3 of 8 in the series 15 டிசம்பர் 2019

Posted on December 8, 2019

Image result for catalyst CUPROUS OXIDE that uses light to turn carbon dioxide to fuel

Scientists Devise Photo-Catalyst to Turn Carbon Dioxide to Useful Fuel.++++++++++++++++Looking into the hard X-ray Nanoprobe Synchrotron Chamber while Measuring a response of an individual Cuprous Oxide Particle to the exposure of Carbon Dioxide, Water and Light.+++++++++++++++++++++

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++++

Related image

சூட்டு யுகம் புவியைத் தாக்கி
வேட்டு வைக்க மீறுது !
நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்
நாச மாக்கப் போகுது !
சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !
பேய் மழைக் கருமுகில் சூழுது !
நீரை, நிலத்தை, வளத்தை,
பயிரை, உயிரை, வயிறை
விரைவில் சிதைக்கப் போகுது !
கடல் மட்டம், வெப்பம் ஏறி
கரைகள் மூழ்கப் போகுது !
மெல்ல  நோய்கள் பரவி, நம்மைக்
கொல்லப் போகுது !
நில்லா திந்த கலியுகப் போர் !
பொல்லாத கரிவாயு மயத்தைப் புவியில்
இல்லாமல் செய்ய வேண்டும் !

++++++++++++++++

Related image

இரசாயன ஆராய்ச்சியாளர் புதிய முறையில் கரிவாயுவை எரிவாயுவாக மாற்ற முயல்கிறார்.

நாளுக்கு நாள் கரிவாயுவின் கொள்ளளவு நமது சூழ்வெளியில் பெருகிக் கொண்டே ஒரு தாக்கத்தை உண்டாக்க வருகிறது.  அதைக் கட்டுப்பாடு செய்ய, அல்லது அளவைக் குறைக்க சமீபத்தில் விஞ்ஞானிகள் சூழ்வெளியில் கரியைக் கைப்பற்றவோ, விழுங்கவோ, அல்லது அதை ஓர் எரிசக்தி வாயுவாய் மாற்றவோ முயன்று வருகிறார்.   அவற்றில் ஒரு முறைதான் இந்த ஒளித்துவ இயக்க ஊக்கி சாதனை [Photo-Catalytic Process]

Image result for catalyst CUPROUS OXIDE that uses light to turn carbon dioxide to fuel

அமெரிக்க எரிசக்தித் துறையகத்தின் ஆர்கான் தேசிய ஆய்வுக்கூட [Argonne National Laboratory U.S. Department of Energy]  விஞ்ஞானிகள், சூரிய ஒளியை இயக்க ஊக்கியான தாமிரத்தின் [Copper] மீது பாயவிட்டுக் கரிவாயுவை மெதனால் எரிவாயுவாக [Methanol] மாற்றியுள்ளார். இந்த ஒளித்துவ இயக்க ஊக்கி தாமிர ஆக்சைடு [Photo-Catalyst : Cuprous Oxide].  அந்த புதிய முறையைப் பயன்படுத்திய விஞ்ஞானி டியானா ராஜ்  [Tijana Rajh]  என்பவர். அந்த இரசாயன முறையில் தனிப்பட்ட  ஆறு எலக்டிரான்களை உண்டாக்கி கரிவாயுவை மெதனால் எரிவாயுவாக மாற்றிக் காட்டினார் [A Semiconductor Cuprous Oxide when exposed to Sun Light, can produce Electrons that become available to react with or reduce many compounds. To make Methanol from CO2, we need six Electrons] . இந்த புதிய இரசாயன முறை, வணிக முறையில் பேரளவில் இனி செய்து காட்ட வேண்டும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

பூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி ?

Planned Fossil Fuel Extraction Would Blow Past Warming Limits
  1. https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/
  2. https://oilprice.com/Energy/Coal/China-Adds-Wave-Of-New-Coal-Fired-Power-Plants.html
  3. https://www.carbonbrief.org/mapped-worlds-coal-power-plants
  4. https://www.npr.org/2019/04/29/716347646/why-is-china-placing-a-global-bet-on-coal
Image result for carbon dioxide buildup
Related image

புவி மாந்தருக்கு ஆண்டு முழுதும் இடர் விளைவிக்கும் சூட்டு யுகம்

சுமார் 800,000 ஆண்டு காலமாக நமது பூர்வ உயிரின மூலவிகள் தோன்றியது முதல் சூடேற்றக் கரிவாயு [கார்பன் டையாக்ஸைடு] தொடர்ந்து சேமிப்பாகி, தற்போது வாயுக் கொள்ளளவு மிகவும் ஏறிவிட்டது என்று  பென்சில்வேனியா பல்கலைக் கழகக் காலநிலைப் பேராசிரியர், மைக்கேல் மான்ன் 2019 மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்துள்ளார்.   மே மாதம் 11 ஆம் தேதி, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அளவாகப் 415 ppm [parts per million] பெருகி யுள்ளது.  இந்த அளவைக் கருவி மூலம் அறிந்தது : ஹவாயின் மௌன லோவா தேசீகக் கடற்துறைச் சூழ்வெளி ஆணை  ஆய்வகம் [National Oceanic and   Atmospheric Administration’s Mauna  Loa Observatory, in Hawaii].  1958 முதலாக இந்த ஹவாயி ஆய்வகம் செய்து வருகிறது.

Image result for carbon dioxide buildup

Global Coal Power Plants :

Year:  2018

Operating: 2,024,100 MW

Related image
Image result for carbon dioxide buildup
https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/

There is a set of technologies, scientists say, without which the world is unlikely to avert climate crisis. These so-called “negative-emissions technologies” have been discussed by climate scientists in academic journals for many years. But now, entrepreneurs at three startups—one each in the US, Canada, and Switzerland—are vying to bring the most promising of those technologies to market. They will potentially offer the world a new set of tools to stave off climate catastrophe—a reverse gear on a car headed for the cliff.

The startups have each been developing a technology called direct air capture. The idea is to build machines that can filter the air and capture only carbon dioxide molecules. If those molecules aren’t released into the atmosphere, the result is negative emissions. So far every startup has showed the technology works. The next hurdle is to scale the technology and lower its cost.

First out of the gate was Climeworks. In 2017, with the help of small grants from the EU, the Swiss startup installed a machine in Iceland that captured carbon dioxide from the air, mixed it with water, and injected it underground. There, thanks to geology, the gas reacted with minerals to become stone. The machine captures about 50 metric tons each year, which is the annual emissions of one household in the US—or about 10 in India.

But to hit the more ambitious climate goals set under the Paris climate agreement, annual negative emissions need to reach more than 1 billion metric tons by mid-century. That’s why an announcement made last month in Jackson Hole, Wyoming was especially interesting. Canadian startup Carbon Engineering is pairing with US oil giant Occidental Petroleum to build a plant by 2022 that will capture and bury 500,000 metric tons each year. The plant is expected to cost hundreds of millions of dollars.

State of Climate 2018

Here’s how the plant works: A large fan sucks in huge volumes of air and passes it over corrugated sheets. A chemical solution, which reacts with carbon dioxide in the air, is poured onto the sheets. The carbon-rich solution is then transported to a container where it’s brought in contact with quicklime (or calcium oxide) that reacts with the mixture to form pellets of limestone (or calcium carbonate). In a third container, these limestone pellets are heated to about 1000°C to create quicklime that can be reused and release carbon dioxide as a pure stream of gas. The greenhouse gas can then be injected underground in depleted gas fields or converted into something useful.

(To heat the kiln to 1000°C, natural gas is burned in pure oxygen and the carbon dioxide produced in the process is also captured. There are also plans to use renewable electricity to heat the kiln, cutting out the use of any fossil fuels.)

In June 2018, Keith published a peer-reviewed study in the journal Joule that described the process in great detail. It’s the only direct-air-capture (DAC) company to offer its work for peer review so far. The main point of the paper, however, was to correct a misconception about the technology that it’s necessarily expensive.

According to a 2011 study by the American Physical Society, DAC technology could cost more than $600 per metric ton. For context, the highest global price on carbon emissions—as a tax or a tradable credit—is around $200 per ton. But Keith showed that Carbon Engineering’s technology could capture carbon dioxide for between $100 and $250 per metric ton.

Within months of the paper’s publication, Steve Oldham, who Keith and Holmes had brought in to be CEO of Carbon Engineering, found himself in a meeting with Vicki Hollub, CEO of Occidental Petroleum. She wanted access to more carbon dioxide. He wanted to raise capital to scale up the technology to capture hundreds of thousands of tons each day.

இம்முறை போக அடுத்துப்  பயன்படும் முறை : பனிப்பாறை வளரும் காலங்களில் [Interglacial Periods] சேர்ந்திருக்கும் பூர்வ வாயுக் குமிழ்கள்  சமீபத்து பனியுக யுகத்தில் நீண்ட குழல் களைச் சொருகி வாயுவின் அளவு  200 ppm என்று  அறிந்தது.  தற்போதைய பனியுகச் சேமிப்பு  அளவுநிலை : 280 ppm. ஒவ்வோர் ஆண்டும் பூமி 3 ppm காரிவாயு மிகையாகப் பதிவு செய்கிறது.  அதே சமயத்தில் 19 நூற்றாண்டு தொழிற் புரட்சி காலத்தில் பூகோள உஷ்ணம்  1.8 டிகிரி F  [1 டிகிரி C ] ஏறியுள்ளது.  இன்னும் பத்தாண்டுகளில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவு : 450 ppm அளவைத் தாண்டிவிடும் என்று மைக்கேல் மான்ன் எச்சரிக்கை விடுகிறார்.  பனித் தட்டுகள் சிறிதாக இருந்த போது,  கடல் மட்டம் 65 அடி [20 மீடர்]  உயரத்தில் மிகையாய் இருந்துள்ளது.

http://www.chicagotribune.com/92378906-132.html
Added Arctic data shows global warming didn't pause

Added Arctic data shows global warming didn’t pause

November 20, 2017

உலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை

22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.  பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு முயற்சி இது.  இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K].  இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள்.  இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள்.  பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை.  இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது.

இதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே.   இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி  ஸெயின்ட் ஜேக்ஸ்.   அவர் கூறுவது :  கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான்.  அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை.

2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன.  அதாவது 1.5 C அளவுக்கு நிலைநாட்ட முடிவு செய்தன.  பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன.  சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர,  எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது !

An Argo float is deployed into the ocean

3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans

Image result for oceans are warming rapidly

கடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

கடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது.  இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள்.  ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது ?  எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது ?  இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது ? பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது ?

Image result for oceans are warming rapidly

பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது.  மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே.  அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும்.  சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார்.  அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது.  அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங்  [Dr. Gonjgie Wang].

“எமது ஆய்வுப் பதிப்பு  1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில்  பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு  [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங்.  இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices].  அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.

Icebergs in the Sea

கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் 

21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு.  கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்:  ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது.  நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப்  பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு  என்ன ? மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது.  துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.

கிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது.  கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும்.  அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும்.  அப்படிக் கிரீன்லாந்து உருக  பல நூற்றாண்டுகள் ஆகலாம்.  தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன்  என்று  ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.

Greenland Ice melting
Image result for oceans are warming rapidly
http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc

http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

++++++++++++++++++++

Image result for oceans are warming rapidly

கடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப் பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகை யாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான்.  அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.  ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.ஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]பூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.டாம் வாக்னர் [Cryosphere Program, NASA Headquarters, Washington.D.C]

Image result for oceans are warming rapidly

நாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.1992 ஆண்டு முதல் 2015 [?] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது.  சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது.  இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட  உயரம்  ஏறப் போகிறது ? 

Image result for oceans are warming rapidly

கொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார்.   2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர்  [United Nations Intergovernmental Panel on Climate Change]  அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு  இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது.   இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.

Image result for oceans are warming rapidly

இந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது.  கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில்  உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது.  இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள்.  அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.

Greenland Rivers -2

2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year]  என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது.  அதாவது  2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது.  2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர்.  கடைசி  மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

Van Den  Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]

கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது !  அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.

Image result for oceans are warming rapidly

2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.

லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது.  நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.

திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]

Arctic Ice Region

“துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும்,  விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும்  கிடைத்தது.   இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது.   பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய்  நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

Image result for oceans are warming rapidly

கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.

கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது.  இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில்  [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது.  கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன.   இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில்  ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000  முதல்  46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல்  61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.

Arctic Ice Retreat

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!

Image result for oceans are warming rapidly

அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

Greenland Iceberg

“பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

“ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

Greenland homes

“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

Greenland Location

“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

Melting Days

“கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

2.  20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

Fig 1 Carbon Emissions
Fig 1 Global CO2 Concentrations

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!  கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது.  அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்புச் சாலை களிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக் களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக் கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

தகவல்:

1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)

2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

6.   [11 Facts About Global Warining ]

7.   http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole  [September 21, 2006]

8.  http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html  [November 13, 2009]

9.  http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html#  [December 6, 2012]

10.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [December 8, 2012]

11.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina  [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012]

12.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy  [Sandy Hurricane Damage in New York, New Jersey etc]

13.  http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite  [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012]

14.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment  The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center  [Noember 20, 2012]

15.  EcoAlert :  Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels  [December 3, 2012]

16.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-148   [May 12, 2014]

17. http://scitechdaily.com/rivers-glacial-meltwater-contribute-rising-sea-levels/  [Jan 13, 2015]

18.  http://en.wikipedia.org/wiki/Greenland  [May 16, 2015]

19.  http://www.nasa.gov/jpl/rivers-are-draining-greenland-quickly-nasa-ucla  [May 16, 2015]

20. http://www.spacedaily.com/reports/NASA_Zeroes_in_on_Ocean_Rise_How_Much_How_Soon_999.html   [August 27, 2015]

21.  http://www.space.com/30379-nasa-sea-level-rise-model-video.html  [August 26, 2015]

22.  https://www.theguardian.com/environment/climate-consensus-97-per-cent/2017/jun/26/new-study-confirms-the-oceans-are-warming-rapidly [June 26, 2017]

22(a)  http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html [June 27, 2017]

23.   https://phys.org/news/2017-06-oceans-rapidly.html  [June 30, 2017]

24. http://www.terradaily.com/reports/Oceans_are_warming_rapidly_999.html  [July 3, 2017

25.  https://www.accuweather.com/en/weather-blogs/climatechange/new-research-confirms-that-global-oceans-are-warming-rapidly/70002053  [July 6, 2017]

26. http://www.spacedaily.com/reports/Figuring_out_how_fast_Greenland_is_melting_999.html  [July 7, 2017]

27.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/07/ecoalert-greenlands-ice-melt-doubles-the-planets-canary-in-the-mine-shaft.html  [July 10, 2017]

28.  https://www.livescience.com/59773-trillion-ton-iceberg-breaks-off-antarctica.html?  [July 12, 2017]

29. https://phys.org/news/2017-10-paris-climate-goals-recede-geoengineering.html  [October 11, 2017]

30. http://environmentalresearchweb.org/cws/article/yournews/70191  [October 13, 2017]

31.  https://www.canada.ca/en/environment-climate-change/services/climate-change/science.html  [November 23, 2015 – 2017]

32.  //www.livescience.com/19481-ice-age-carbon-dioxide-orbit.html  [April 12, 2012]

33. https://www.livescience.com/35635-climate-change-health-countdown.html  [April 22, 2019]

34. https://www.livescience.com/64535-climate-change-health-deaths.html  [January 17, 2019]

35. https://public.wmo.int/en/media/press-release/state-of-climate-2018-shows-accelerating-climate-change-impacts  [March 28, 2019]

36.  https://www.livescience.com/65469-highest-carbon-dioxide-levels.html  [May 14, 2019]

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  December 7, 2019 [R-8]

Series Navigation2019இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *