பாதை தவறிய
பழமொழிகள்
பகைவனுக்கும் ஊஹான்
தொற்றாது அருள்
தும்மல் துப்பல்
இருமல் பொத்து
அடையாளம் அடுத்து
வெப்பம் நடப்பு
எச்சில் எமன்
இடைவெளி கூட்டு
யாகாவாராயினும்
கைசுத்தம் காக்க
ஊரோடு சேர்க்குமுன்
உரைத்துப் பார்
ஊஹான் என்றால்
உலகம் நடுக்கும்
கொவிட் என்றால்
குலையே நடுங்கும்
கூடாமல் வாழ்ந்தால்
கோடி நன்மை
கட்டும் எதையும்
கசக்கிக் கட்டு
தொற்றுக் கண்டால்
தூர விலகு
வல்லரசு என்பது
வழக்கொழிந்தது
கொடுங்கோல்
நின்று கொல்லும்
கொரொனா
அன்று கொல்லும்
ஒளிகளாய் தாதியர்
விழிகளாய் மருத்துவர்
தலைக்கு மேல்
வெள்ளமும் சிங்கைத்
தலைமைக்கு அடங்கும்
அமீதாம்மாள்
- ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி
- கொவிட்19
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்
- தும்மல்
- குடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம்
- இடம் பெயர்வும் என் நாவல் அனுபவங்களும்
- குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி
- கனிமொழி. ஜி கவிதைகள் — ஒரு பார்வை
- பின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஞானக்கண் மானிடன்
- மாவோவால் உருவான கொரோனா வைரஸ் நோய்கள்.