“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….

This entry is part 13 of 13 in the series 22 மார்ச் 2020

நான் இயக்கிய “சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.
VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.
யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள் தரும் உற்சாகம் மேலும் படங்கள் எடுக்க ஊக்கமளிக்கும்.
உங்கள் ஆதரவு தாருங்கள்.
நன்றி/ சிகப்பு சுடி வேணும்ப்பா படக்குழு. / கவிஞர் அய்யப்ப மாதவன்

வணக்கம் அய்யப்ப மாதவன், உங்களுடைய எத் தனை வருட கனவு இது! என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்! படம் பார்ப்பதை விட முதலில் உங்களை மனதார வாழ்த்துவது தான் முக்கியமாகப் பட்டது அய்யப்பன். அதனால் முதலில் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பொழுதுதான் படம் பார்த்தேன். விஷுவல் மீடியம் என்பதைப் புரிந்துகொண்டு மிக அளவாக, அர்த்தமுள்ள வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கின்றன. அநாவசியமாக ஒரு சொல்லோ, காட்சியோ இல்லை. பீடமேறி போதனைகளோ, ‘ நான் எப்படி இயக்கியிருக் கிறேன் பாருங்கள்’ என்று பீற்றிக்கொள்ளும் முனைப்போ இல்லை. படம் இயல்பாக நகர்ந்து சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறது!

மாநிறம் அழகுதானே என்று பேசியபடியே மேக் கப்பை அப்பி பெண் பாத்திரங்களை வெள்ளை நிறத்திலேயே தொடர்ந்து காட்டிவரும் (அல்லது, மாநிறப் பெண் அவளுடைய நிறத்திற்காக துயரம் அனுபவிப்பதாகவே காட்டிவரும்), அதன் மூலம் வெள்ளைநிறமே உயர்வு என்ற கருத்தை இளைய தலைமுறை யினரிடையே பரப்பி ‘ஃபேர் அண்ட் லவ்லி இத்தியாதிகளுக்கு இலவச விளம் பரம் செய்துவரும், சின்னத்திரை, வெள்ளித் திரைப் போலித்தனத்திலிருந்து விடுபட்டு கதாநாயகியை இயல்பான நிறத்திலேயே காட்டியிருப்பது அருமை. இந்தப் படத்தில் வரும் கதா நாயகி எத்தனை அழகு!

காதலித்து மணந்த கணவனின் குடிப்பழக்கத்தை அவள் வெறுக்கிறாளே தவிர கணவனை வெறுக்கவில்லை என்பதையும், காசில்லாத அண்ண னிடம் தங்கைக்கு உள்ள மாறாத பாசத்தையும் அளவான வார்த்தைகளில் காட்சிகளில் மனதில் பதியவைக்கிறது உங்கள் படைப்பு.

 

குழந்தைக் கதாபாத்திரத்தின் இயல்பான இயக்க மும் அதன் பேச்சில் தெரியும் வசன நுட்பமும் குறிப்பிடத்தக்கது. வகுப்பில் டீச்சர் நல்ல பழக்கம் எது தீய பழக்கம் எது என்று சொல்லித் தருவதாக (கெட்ட பழக்கம் என்று குழந்தை சொல்லாது!) அந்தச் சிறுமி தன் தகப்பனிடம் சொல்வது இதற்கோர் எடுத்துக்காட்டு!

கதாநாயகன் ஒரு கண பரிதவிப்பில் திருடுகி்றார் என்றாலும் அவருடைய ஏழ்மையைக் காரணம் காட்டி அவருடைய செயல் நியாயப்படுத்தப்படவில்லை! தகப்பன்சாமியாய் குழந்தையின் இயல்பான பேச்சு அவரைத் திருத்திவிடுவதைப் பார்க்க நிறைவா யிருக்கிறது.

நடித்திருப்பவர்கள் எல்லோருமே தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக் கிறார்கள். உங்களுக்கும் இந்தப் படத்தில் பங்கேற்ற மற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Series Navigationஇருப்பும் இன்மையும்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *