பெண்கள் பெண்கள் பெண்கள்

This entry is part 6 of 7 in the series 5 ஏப்ரல் 2020

ஸிந்துஜா  

1

உங்களிடம் நான்

கேட்டுக் கொள்வதெல்லாம்

எனக்கு எதிரே

வரும் போது 

என்னைப் பார்க்காமல்

செல்லுங்கள்..

2

எனக்கு அவர்கள்

ஸாரி அணிந்து கொண்டு

வருவதுதான் பிடிக்கும்

என்று எப்படியோ

தெரிந்து கொண்டு

மற்ற எல்லா ஆடைகளையும்

அணிந்து வருகிறார்கள்.

3

எதிரே வருபவளைப்

பார்க்காமல் போகிறவன்

காதுகளில் துப்புகிறாள்

எரிச்சலுடன்:

மூஞ்சியைப் பாரு.

4

பெண்ணென்னும்

மாயப் பிசாசு

எனறவனைக் கூப்பிட்டு

உதைக்க வேண்டும்.

பிசாசை அவமதிக்க

அவனுக்கென்ன

உரிமை இருக்கிறது ?

5

குழாயடிச் சண்டை

அல்ல 

குழாயடிச் சமாதானம் வேண்டும் எனக்கு.

தண்ணீர் பிடிக்க

ஆண்களை அனுப்பவும்

6

ஜானகிராமனின்

பெண்களைப் பற்றி

மாய்ந்து மாய்ந்து

எழுதுகிறார்கள்

ஆண்கள்.

பெண்கள்?

ம் ஹும். 

மூச்சு விடுவதில்லை.

7

தாயிற் சிறந்ததொரு

கோயிலுமில்லை.

வாஸ்தவம்

ஊருக்கு வெளியே 

அந்த முதியோர் இல்லத்தில்

நூற்று இருபத்து நான்கு

கோயில்கள்.

8

கையைப் பிடித்து இழுத்தவனை

செருப்பால் அடிக்கலாமா என்று

கேட்டேன்.

அவள் சிரித்தாள் :

ஏன் பாதுகை

பட்டாபிஷேகத்துக்கு மட்டும்தானா?

9

குறிகளும்

என்ன செய்வ?

இருபத்தி நாலு மணி நேரமும்

அவர்களின் கவிதைகளில்

சிறைப்பட்டிருக்கையில்?

Series Navigationவட்டத்துக்குள்வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

3 Comments

  1. Avatar எஸ்.சுவாமிநாதன்

    ஸிந்துஜா எழுதனதை மாத்திரம் படிச்சேன்.
    ரொம்ப நாளாச்சு, திண்ணை படிச்சு.

  2. Avatar ராஜீவ் காந்தி

    மிக யதரத்தமான வாழ்வியலை உள்ளது உள்ளபடியே தந்தமைக்கு நன்றி.

  3. Avatar அனுவித்யா

    அடடா நல்லா இருக்கு கதை

Leave a Reply to எஸ்.சுவாமிநாதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *