அருணா சுப்ரமணியன்
நீயே உலகமென்று களித்திருந்தேன்
உன்னால் ஓர் உலகம் கிடைத்த
உன்மத்தத்தில் ….
இவ்வுலகமே எனதானப் பொழுதிலும்
உன்னையே என்
உலகமென்று கொண்டிருந்தேன்..
உலகத்தின் உதாசீனங்களை எல்லாம்
உதறியெழ முடிந்த நீ
ஏனோ என்னை
உதாசீனமாய் உதறிட விழைந்தாய்?
உதாசீனங்களை உதறிட முடிந்த
எனக்கு உன்
உதறலை உதாசீனப்படுத்த
தெரியவில்லை…
ஆகட்டும்,
உதாசீனங்களை உதறிடக் கற்றவாறே
உதறல்களை உதாசீனப்படுத்தவும்
உருமாற்றிக்கொள்கிறேன்
உன்னாலான உலகத்தில்…
-அருணா சுப்ரமணியன்
- கைகொடுக்கும் கை
- புலி வந்திருச்சி !
- பிள்ளை யார்?
- மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்
- பெற்றோர்கள் செய்ய வேண்டியது
- உன்னாலான உலகம்
- புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
- கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்
- அறியாமை அறியப்படும் வரை….
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நான் தனிமையில் இருக்கிறேன்
- எழுத்தாளனும் காய்கறியும்
- எனக்கு எதிர்கவிதை முகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்
- அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
- அப்பால்…..
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாடு கேட்கிறது
- ஜீவ அம்சம்
- மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020
- பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு