உன் தவறுகளைக்
குழி தோண்டிப் புதைத்துவிட்டு
அவற்றின் மேல்
கம்பீரமாக நின்று பேசுகிறாய்
உன் கற்பனைகளுக்கு
முலாம் பூசிக்
குற்றச்சாட்டுகளென
என்னைச் சுற்றி
வேலி கட்டுகிறாய்
கயிற்றைப் பாம்பென்று
சொல்லிச் சொல்லி
மாய்ந்து போகிறாய் நீ
காது தாண்டிய உன் வாய்
அறியாமையை முழக்கியும்
நீ ஓய்ந்தபாடில்லை
யூகங்களின்
பரந்த வெளியில் நின்று
நீ தாண்டவமாடுகிறாய்
அபாண்டத்தை முன் வைக்கும்
உன் புலம்பல்களே
உனக்குத் தண்டனையாகிறது
++++++++