கு.அழகர்சாமி
(1)
ஊரடங்கி
நடமாட்டமில்லாமல்
வீதி-
இருபுற வீடுகளிடையே
திடநதியாய் ஓடி
சுவடுகள் பதியாது
விலாசமிழந்து
நிசப்தம்
சப்திக்க நடக்க
நீட்டித் தலைக்கு
வெளியை வைத்து உறங்கி-
(2)
நாளும்
நடந்து-
நன்கு தெரியும் என்னை
அதற்கு –
ஆனால் தெரியாதது போல்
கடக்கிறது என்னை
வெறிச்சோடிய
வீதி
(3)
“வெளியே”
நடை செல்ல முடியாமல்-
ஒற்றைத் தென்னை
உரைக்கும்:
” நிற்கிற அதே இடத்திலேயே நட
என்னைப் போல்-
‘வெளியே’
உன்னைச் சுற்றி-”
(4)
தனித்து-
தினம் தினம்
தென்னையும்
நானும்-
பேசியது
ஞாபகமில்லாமல்-
பேசாதது
ஞாபகமாய்-
(5)
விலகி
அறைக்குள் தனித்து
நான் –
அறையை விட்டு
வெளியேறி
வீடு-
(6)
சிநேகிதர்
பேச வந்தார்
அவரும் நானும்
முகக் கவசத்தோடு-
தொற்றின்
கவனத்தில்-
பேசிய பேச்சில்
இடைவெளி கூடி-
பேசா மெளனத்தில்
இடைவெளி குறுகி-
(7)
திடுக்கிட்டு
ஓர் இலை
விழ-
தன் தொலை ஊருக்கு
அடிநிலம் பற்றி எரிய நெடுநடை ஏகி
அயர்ந்து வழியில் தண்டவாளத்தில் இராவில்
உறங்கி
இரயிலேறிச் சிதைந்த புலம் பெயர்ந்தவனின்
முகமெனக் கண்டு-
நடுக்குற்று
நான்.
(8)
தொற்றின்
பீதி-
சிநேகிதனின் சாவுக்குச்
செல்லவில்லை.
சிநேகிதன்
இறந்தும்
இறக்காமல்-
நான்
இறக்காமலும்
இறந்து-
நினைக்கும்
போதெல்லாம்-
(9)
தினம்
கூடிக்-
கூடும்
சாவுகளை
எண்ணிக்கையாய்க் கேட்டு
வாசித்து-
’இனி சாவுகள்
அதிர்ச்சியாயில்லாமல் போய் விடுமோ
என் சாவைத் தவிர
எனக்கு’
என்றோர்
அச்சம்.
(10)
வேறெங்கு
போக?
வீட்டுக்குள்
எவ்வளவு தொலைவு நடக்க?
உட்கார்ந்த இடத்திலேயே
எவ்வளவு நேரம் கடக்க?
வானில் திரியும் பறவைகளோடு மனம்
சுற்றித் திரிந்து-
ஆதவன் சாய
அறிவிக்க மாலையைப் பறவைகள்-
இன்னொரு மாலையாய் இல்லை
அது.
வீடு திரும்புபவை பறவைகளாக மட்டும் இருக்க
வீடு திரும்புகிறேன் பறவைகளோடு
வீட்டிலிருந்தபடியே
யான்.
- கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா
- சின்னக் காதல் கதை
- கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்
- கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….
- எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?
- சூம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4
- ஆம் இல்லையாம்
- கவிதை என்பது யாதெனின்
- ஒரு விதை இருந்தது
- வாழ்வின் மிச்சம்
- பவளவண்ணனும் பச்சைவண்ணனும்
- அந்தநாள் நினைவில் இல்லை…..
- குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!
- பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி
- மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு
- கோவை ஞானியும் நிகழும் கவிதையும்
- பெருந்தொற்றின் காலத்தில்
- முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை
- பரமன் பாடிய பாசுரம்
- வெகுண்ட உள்ளங்கள் – 10