எஸ்ஸார்சி
‘சார் கீழ் வீடு வாடகைக்கு விடறதா எழுதிப் போட்றிக்கிங்க. பாத்தேன் எனக்கு வாடகைக்கு வீடு வேணுமே’
என்னிடம்தான். ஒருபெண்மணி தொலைபேசியில் பேசினாள். நான் முதல் தளத்தில் குடியிருக்கிறேன். கீழ் தரைதள வீட்டை வாடகைக்கு விடவேண்டும். ஆக டு -லெட் போர்டு போட்டு இருக்கிறேன்.
‘ஆமாம். உங்களுக்கு வாடகைக்கு வீடு வேணுமா’
‘ஆமாம் எனக்குத்தான் சார்’ அந்தப்பெண் பதில் சொன்னாள்.
‘ நாங்க வீடு வாடகைக்கு விட புரோக்கர்ங்கள அனுமதிக்கறது இல்ல’ நான் கண்டிப்[பாய்ச் சொன்னேன். எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கும் போது எல்லாமே எனக்குத் தெரிந்தமாதிரிதான் ஆரம்பிப்பேன்.
’‘வாடகை எவ்வளவு அட்வான்ஸ் எவ்வளவுன்னு தெரியணுமே சொல்லுங்க’
’வாடகை அஞ்சி அட்வான்ஸ் பதினைந்து. மாசம் பொறந்தா தேதி அஞ்சி க்குள்ள வாடகை வந்துடணும் நீங்க குடும்பமாதான வருவீங்க’
‘ஆமாம் சார். அதுல என்ன’
‘இல்ல நாங்க பேச்சலருக்கு விடறது இல்ல’ யாரும் பிரம்மச்சாரி என்கிற வார்த்தயை மட்டும் பிரயோகிப்பதில்லை. நானும் தான்.
‘சார் நாங்க குடும்பமாதான் வருகிறோம். நானு எங்க சாரு அப்புறம் எங்களுக்கு பசங்க ரெண்டு பேரு’
‘அப்ப ரொம்ப சரி’ சின்ன குடும்பம். சாருன்னா அது’
‘ எங்க வீட்டுக்காரருதான் சாரு’
’சரித்தான். வீட்டைப்பாக்க எப்ப வர்ரீங்க. ஆளுங்க கேட்டுகிட்டே இருக்காங்க. யாரு அட்வான்ஸ் மொதல்ல தர்ராங்களோ அவுங்களுக்கு நான் விட்டுடுவேன் பெற்வு வருத்தப்படாதிங்க’’
கறாராகத்தான் பேசினேன்.
‘சார் நானே தோ ஏ டி எம் போயி ரூவா எடுத்துட்டு வந்து அடவான்ஸ் கொடுத்துடறேன்’
‘வீடு உங்களுக்கு புடிக்கவேண்டாமா’
‘சாரு நான் உங்க வீட்டை பாத்து இருக்கேன்’ அதக்காலி பண்ணிகிட்டு சொந்த வீட்டுக்குப்போன அந்த அய்யா என் கூட ஸ்கூல்ல டீச்சரா வேல பாக்குறவரு. அந்த வீட்டுக்கு நான் மொதல்லயே வந்து இருக்கன் ‘இந்தி டீச்சர் கமலான்னா அவுருக்குத்தெரியும்’
அந்தப்பெண் பதில் சொன்னாள். டீச்சர் உத்யோகம் பரவாயில்லை வேறு யாராவது வருவதற்கு பதில் டீச்சர் என்றால் பரவாயில்லைதானே . எனக்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது.
அந்தப்பெண் அட்வான்ஸ் பதினைந்தாயிரத்தைக்
‘தண்ணி மோட்டாருக்கு தனியா ரூவா எர நூறு மாசம் ஒண்ணுக்கு வாடகையோட எனக்கு வந்துடணும்’ ஜம்பமாக ச்சொன்னேன்.
‘ அவளும் தலையை ஆட்டினாள்.
‘ கரண்டு அட்டைய புடிங்க இது வரைக்கும் வந்த பில்லு கட்டியாச்சி. இனி மேலுக்கு நீங்க கட்டிகிறிங்க. மீட்டர் ரீடிங்கை ஒரு எட்டு பாத்துகுங்க. தண்ணி மோட்டரு என் வீட்டுக்கு வர்ர கரண்டுல ஓடுது. அதான் தண்ணி கரண்டுக்குன்னு காசு எர நூறு ரூவா தனியா கேக்குறன்’
‘எல்லாம் ரைட்டாதான் இருக்கு’ அவர் பதில் சொன்னாள். ஒரு டீச்சருக்கு ரைட் ராங்க்தான் நிறையவே போணியாகிறது.
‘சாருக்கு எங்க வேலன்னு சொல்லுலயே’
‘அவுரும் என்னோட ஸ்கூலுக்கு த்தான் வர்ராரு’
அவள் பதில்தான் சொன்னாள். பதில் பூடகமாக இருந்தது.
ஒரு வாரம் சென்றது. மாதத்தின் முதல் நாள். நல்ல நாளாகவும் இருந்தது. குடி வருவதாகச்சொல்லிச்சென்ற அந்த இந்தி டீச்சர் வந்தும் விட்டார்.
வீட்டு வாசலில் டீ கேன் கட்டிய பழைய சைக்கிள் நின்றது.
இந்தி டீச்சரின் கணவர். டீயை எவர்சில்வர் கானில்எடுத்துக்கொண்டு சைக்கிளில் சுற்றி ச்சுற்றி வியாபாரம் செய்பவர். ஸ்கூலுக்கும் அவர்தான் டீ சப்ளை. இப்படியாக டீ கொடுக்கும் போதுதான் இந்தி டீச்சருக்கும் அவருக்கும் சினேகம் தொடங்கி அது கல்யாணம் வரைக்கும் போனது போல.. பிறகு குடும்பம் அது இது என்றாகி விட்டதாக அந்த டீ மாஸ்டர் என்னிடம் சுய புராணம் சொன்னார். இந்தி டீச்சர் அந்தப்பக்கம் வரவில்லைதான்.
ரெண்டு பசங்க எனக்கு என்று கமலா டீச்சர் சொன்னது பொய்யில்லை. அந்த பசங்க இருவருக்கும் வயது முப்பதை தொட்டுக்கொண்டும் இருக்கலாம். ஒருவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள். ஆனால் மனைவி விபத்தொன்றில் இறந்து போனாளாம். அந்த தாயில்லா குழந்தைகளைப்பார்த்துக்கொண்டு
இந்தி டீச்சர் ஸ்கூலுக்குப்புறப்படு
நான் யோசித்துப்பார்த்தேன். இந்தி டீச்சர், டீ வியாபாரி ரெண்டு பேர். பையன்கள். ரெண்டு. அவர்களுக்
ரெண்டு ரெண்டு ரெண்டு ஆக ஆறு பேர் இவர்களோடு பிரசவத்திர்கு இருக்கும் சின்ன மருமகள். மொத்தம் ஏழு பேர்.
இந்தி டீச்சரின் தாய் மட்டும் இருக்கிறாளாம். அந்தத்தாயுக்கு ரெண்டு பெண் குழந்தைகள்..இந்த மாதம் ஒரு பெண் வீடு அடுத்த மாதம் வேறு ஒரு பெண் வீடு என கண்டிஷன் போட்டு மாரி மாறி அம்மாவைப் பார்த்துக்கொள்கிறார்களாம். ஆக ஒரு நாள் அந்தத்தாயும் கமலா டீச்சர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
‘இங்கணு ஒரு மாசம்னா. அங்கணு ஒரு மாசம் என்னங்க நான் சொல்லுறது நாம்ப செய்யுற எதுலயும் ஒரு நெய்யாயம் இருக்கோணும்ல’ என்னிடம் அந்த டீச்சரின் தாய் கொங்கு நாட்டு பாஷையில் சொல்லிக்கொண்டாள். இப்போது கீழ் வீட்டில் எட்டு நபர்கள் வாசம் செய்கிறார்கள்.
வாயிலில் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு இந்தி டீச்சர் நின்று கொண்டிருந்தாள்.
‘ என்ன விஷயம்’ கேட்டேன்.
‘ஒண்ணும் இல்லேங்க. சின்ன மருமகளோட அம்மா வர்ரேன்னாங்க. காணுல அதுக்கும் பெரசவத்துக்கு நாளு கிட்டத்துல வருதுல்ல அவுங்க வந்துட்டா நமக்கு கொஞ்சம் ஒத்தாசை’
‘ தல பிரசவம் தாய் வீட்டுலதானே செய்வாங்க’
நான் கேட்டுப்பார்த்தேன்.
’அது ஒத்த ஆளு. ஆம்பள இல்லாத எடம். அந்த அம்மாவுக்குமே ரெண்டும் பொம்பள புள்ளைங்க. அப்புறம் யாரு எவுரு பெரசவம் பாப்பாங்க நீங்களே சொல்லுங்க’ வக்கீல் பேசுவது மாதிரிக்கு இந்தி டீச்சர் பேசினாள். அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. நான் வாயையே திறக்கவில்லை.
‘ இந்தி டீச்சரு வூடு இது தானெ கேட்டுக்கொண்டே ஒரு பாட்டியம்மாள் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.
‘ நீங்க யாரு’
நான்தான் வெடுக்கென்று கேட்டேன்.
‘சரியா போச்சி போங்க சம்மந்தியம்மா வந்துருக்காங்க வாங்க வாங்க நீங்க வருணும் வருணும்’ ’ என்று சொல்லி இந்தி டீச்சர் அந்தப்பாட்டியைத்தன் வீட்டின் உள்ளே அழைத்துப்போனாள்.
முன்னம் எழுவர். அந்த சம்மந்தி இந்த சம்மந்தி என இருவர். ஆக ஒன்பது பேருக்கு கீழ் வீட்டில்தான் வாசம். பேரனோ பேத்தியோ பிறந்தால் பத்தாகிவிடலாம்.
இப்போதெல்லாம் நாளொன்றுக்கு மூன்று முறை தண்ணீர் மோட்டார் போடவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகரிக்கவும் கூடும்.
‘எங்களுக்குப் பசங்க ரெண்டு பேரு’
கீழ் வீட்டுக்குக்குடிவந்துள்ள இந்
——————————
- பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.
- இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)
- சரித்தான்
- ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை
- வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்
- ம ன சு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்