Posted in

மேசையாகிய நான்

This entry is part 5 of 23 in the series 6 ஜூன் 2021

 

உமா சுரேஷ்


காலேஜ் சேர்ந்து கல்வி கற்க

வாய்ப்பேதும் வாய்க்கவில்ல…

 

அங்கே காலம் களிக்க கிடைத்ததுவே

கண் கண்ட வரம் தானே…

 

எனைக் கட ந்து சென்ற

ஜுவன் எல்லாமே

அரிய வகைப் பொக்கிசமே…

 

அவரவரின் தனி உலகில்

தனித்தீவு நான் தானே…

 

என் மடிமீது அமராத

ஜுவனேதும் இருக்கிறதா?

 

என் மார்மீது சாயாத

தலைகளேதும் இருக்கிறதா?

 

எத்துனை பேர் எனைக் கடந்து

சென்றாலும்

என்மீது எழுதப்படா பெயரொன்னும் இல்லையடா…

 

எத்துன பெயரைத் தான் நான் சுமந்தேன்…

எனை மட்டும் சுமக்க ஒரு

ஜுவன் ஏதும் இருக்கிறதா???

 

விருப்பு பல பார்த்திருக்கேன்

வெறுப்பையும் தான் பார்த்திருக்கேன்…

 

கதைகள் பல கேட்டிருக்கேன்

காவியமும் பார்த்திருக்கேன்…

 

என் கதையை சொல்லி ஆழ

காது ஒன்னும் கிடைக்கலியே…

 

ஆனந்த கண்ணீரில்

இனிப்பு ருசி இருக்குதடா

சோகத்தின் கண்ணீரில்

உப்புத் தான் கரிக்குதடா…

கண்ணீரின் ருசிகூட

பலவிதமா இருக்குதடா…

 

பெண்-பெண்ணின் நட்புண்டு

ஆண்-பெண்ணின் நட்புண்டு

என்மீது நட்பு கொள்ள

எவருமிங்கு இல்லையடா…

 

பல ஜுவன்களின் கதைய

நான் அறிந்த ரகசியத்தை

யாரிடமும் உரைக்காதே…

ஜுவனில்லா ஜடமென்று

எனை நீயும் நினைக்காதே…

                                    -உமா சுரேஷ்

Series Navigationசெயற்கைச் சிடுக்குபுதராகிய பதர்

One thought on “மேசையாகிய நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *