வாழ நினைத்தால் வாழலாம்…

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 11 in the series 4 ஜூலை 2021

                                                 

ச.  சிவபிரகாஷ்

வனிதையே,

உனக்கு…

வறுமை  தந்த,

வெறுமையில்  தான்.

 

வாழ்ந்தே,

காட்டணும்  – என்னும்,

நிலைமை.

 

வாழ்க்கை,

அவ்வளவு,

 எளிதா?

 

என்றுமே,

யாரிடமும்…

யாசகம்  கேட்டிராத,

தன்மை.

 

தயங்காது,

தன்னம்பிக்கையில்,

களம் இறங்கின,

இளம்பிடியே.

 

இங்கே…

 

 

 

காவலர்  உடையிலும்,

ஏன்…

கல்  உடைக்கும்,

பெண்களையும்,

கண்டுள்ளேன்.

 

கரம்  நோக,

காய்ச்சிய

இரும்பை,

பதம்  செய்வதை,

இப்போது  தான்,

பார்க்கிறேன்.

 

பெண்ணே !

நீ…

தகர்தெறிவது,

தணல்  இரும்பை  மட்டுமா ?

இல்லவே,  இல்லை.

 

முயலாமையால்,

முடியாதென,

முடங்கியேயிருக்கும், – சில,

மூடர்களின்,

கண்களை  திறக்க  தான்.

 

முடங்களே, பாரீர்…

 

 

 

வறுமை  என்றும்  நிரந்தரமல்ல,

“வாழ  நினைத்தால்  வாழலாம்

வழியாய்  இல்லை  பூமியில் “

அன்று…

கவிஞர்  சொன்னது.

 

இன்று…

காட்சி  மெய்யாகிறது.

 

 

 

 

                                                                            ச.  சிவபிரகாஷ்.

 

 

 

Series Navigationபரிணாமம்ஹிப்பி
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *