சி. ஜெயபாரதன், கனடா
நாலாயிரம் ஆண்டுகட்கு
மேலாய்
ஓர் மறை நூலாய்,
வேர்விட்டு
விழுதுகள் தாங்கி
ஆல மரமாய்க் கிளைவிட்டு,
பைந்தமிழ் தவிர,
பாரத மொழிகளின்
ஓரரிய
தாய்மொழி யாய்,
பாலூட்டி
மேலும் தாலாட்டி,
ஞாலப் பேறு பெற்று
பேரறிஞர்
சீர்மொழியாய்,
சிந்தையில்
செழித்து வாழ்ந்த
உன்னத
இந்திய மொழி,
இமய மொழி !
வேத வியாசக ருக்கு
கீதை
ஓதிய தேவ மொழி !
வால்மீகிக்கு
சீதா தேவி நேரே
கூறிய
இராம காவியம்
காளிதாசரின் படைப்பு
மேக தூதகம் !
புத்தருக்கு ஞான
வித்திட்ட
போதி மொழி !
செம்மொழி யாய்
மின்னிய
பொன்மொழி,
பூர்வ மொழியை
சீர்கெட்ட மொழியென
பேர் பெற்ற
மேதையர் கூறும் பேதமை
கேளீர் ! கேளீர் !
கேளீர் !
===============
- ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’
- இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.
- வடமொழிக்கு இடம் அளி
- சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்
- குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்
- கலியுக அசுரப்படைகள்
- விடிந்த பிறகு தெரியும்
- குடை சொன்ன கதை !!!!!
- மரங்கள்
- குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)
- குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)
- நவீன பார்வையில் “குந்தி”
- மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!
- கூலி
- தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்
- யாப்பிலக்கணச் செல்வி சாப்போ
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
- பெரிய கழுகின் நிழல்