https://earthquake.usgs.gov/
https://earthquake.usgs.gov/ earthquakes/eventpage/ us7000f93v/executive
During the past 7 days, Mexico was shaken by 1 quake of magnitude 7.1, 3 quakes between 5.0 and 6.0, 44 quakes between 4.0 and 5.0, 172 quakes between 3.0 and 4.0, and 47 quakes between 2.0 and 3.0. There were also 50 quakes below magnitude 2.0 which people don’t normally feel.
Damages in Acapulco, Mexico September 7, 2021
Biggest quake: 7.1 quake North Pacific Ocean, 8 km south of Acapulco de Juarez, Guerrero, Mexico, Sep 7, 2021 8:47 pm (GMT -5) 4 days ago
Biggest quake today: 4.4 quake North Pacific Ocean, 156 km southwest of Mapastepec, Chiapas, Mexico, Sep 12, 2021 3:32 am (GMT -6) 2 hours 22 minutes ago
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
+++++++++++++++++
பூமகள் சற்று தோளசைத்தாள் !
தாமாக வீழ்ந்தன
மாளிகைகள் !
மாந்தர் மரித்தார்
சிதைவு களில்
சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் !
கடற்தட்டு
தடம்மாறிக் கால் உதைத்தால்
உடனே சுனாமி எழும் !
பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும்
பூகோள அச்சை !
காலம் மாறும் ! பருவம் மாறும் !
நாளின் நீட்சி குன்றும் !
கனல் திரவம் அழுத்தமாகிக்
குப்பெனப் பொங்கும் எரிமலைகள் !
சூழ்வெளி
பாழாய்ப் போக
ஆழ்ந்த பூமிக் குள்ளும்
ஊழல் தட்டுகள்
சூழ்ந்துள்ள தப்பா !
எங்கெங்கு வாழினும்
இன்ன லப்பா !
ஏழு பிறப்பிலும் மானிடர்க்கு
தொல்லை யப்பா !
ஊழிக் கூத்தின்
பிரளய அழிவு அடுத்தடுத்து
அரங்கே றுதப்பா !
முடுக்கி விட்ட பூகோளம்
நடுக்கம் தரும் !
ஊழியின் மேளம் !
+++++++++++++++++++
2021 செப்டம்பர் 7 இல் மெக்சிக்கோ நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம் பேரளவு கோரச் சிதைவுகளை உண்டாக்க வில்லை. அது நடுமைத் தர விளைவுகள் தரும் ஒரு பூகம்பமாய்க் கருதப்படுகிறது. அந்த நில நடுக்கம் அமெரிக்கத் தட்டுகளும், கோகாஸ் தட்டுகளும், [American and Cocos Tectonic Plates] ஆண்டுக்கு 65 மில்லி மீடர் நகர்ச்சி வீதத்தில் மோதியதால் உண்டானது.
கடந்த நூறாண்டில் மெக்சிக்கோ தென்மேற்குப் பகுதியில் பல்வேறு ஆற்றல் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன. அவற்றில் 17 எண்ணிக்கை M 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆற்றல் உள்ளவை.
2017 Central Mexico earthquake in México City.webm
https://youtu.be/Z8JF2PthRkg
2021 செப்டம்பர் 7
https://www.msn.com/en-ca/
2017 செப்டம்பர் மாதத்தில் மெக்சிக்கோ நாட்டில் அடுத்தடுத்து இருபெரும் பூகம்பங்கள் நேர்ந்து, மெக்சிக்கோ நகரிலும், சுற்றியுள்ள மற்ற நகரங்களில் உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் பேரளவில் விளைந்துள்ளன. முதலில் செப்டம்பர் 7 ஆம் தேதியில் 8.1 M அளவு அசுரப் பூகம்பம் சியாபாஸ் கடற் பகுதியைத் தாக்கியுள்ளது. 100 பேர் மாண்டனர். பன்மாடி அடுக்கு மாளிகைகள், வீடுகள் பற்பல நொறுங்கித் துண்டாக்கப் பட்டன. அது நேர்ந்து இரண்டு வாரத்திற்குள் [செப்டம்பர் 19 இல்] 400 மைல் தூரத்தில் [650 கி.மீ.] 7.1 M அளவில் அடுத்த பூகம்பம் தாக்கி 342 பேர் மாண்டனர். 6000 பேர் காயமுற்றனர்.
1985 ஆண்டில் மெக்சிக்கோவில் முன்பு நேர்ந்த பூதப்பெரும் பூகம்பத்தில் 10,000 பேர் உயிரிழந்தார். அது முதல் மெக்சிக்கோ அரசாங்கம் பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சி பொது மக்களுக்கு அளித்து வருகிறது. 2017 செப்டம்பர் 19 தேதிப் பூகம்ப எழுச்சிக்கு 2 மணிநேரத்துக்கு முன்னர்தான் விந்தையாக எச்சரிக்கைப் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறது.
தீக்கனல் வளையத்தில் [Ring of Fire] சிக்கியுள்ள உலக நாடுகளில், ஜப்பான், பெரு, மெக்சிக்கோ, இந்தோனேஷியா ஆகிய நான்கு நாடுகளிலே அடிக்கடி பூகம்ப நடுக்கங்கள் நேர்ந்து, உயிர்ச் சேதமும், பொருட் சேதங்களும் பேரளவு விளைந்து வருகின்றன. இவற்றில் மெக்சிக்கோ நாடு மட்டும் குறுக்கிடும் மிகவும் சிக்கலான பல்வேறு பிறழ்ச்சித் தட்டுகள் [Tectonic Plates] மீது அடிக்கடி நடுங்கிக் கொண்டிருக்கிறது.
பசிபிக் தட்டு, கோகோஸ் தட்டு, ரிவேரா தட்டு, கரீபியன் தட்டு, வட அமெரிக்கன் தட்டு ஆகிய ஐந்து பிறழ்ச்சித் தட்டுகள் அடிக்கடித் தாலாட்டும் மிதப்புப் பகுதியாக மெக்சிக்கோ நாடு பள்ளி கொண்டுள்ளது. இந்த ஐந்து கரத் தட்டுகள், வெவ்வேறு திசைகளில் இயங்கி, நில நடுக்கம் உண்டாக்கி நாள் ஒன்றுக்குச் சராசரி 40 பூகம்பங்கள் நேர்கின்றன !
மெக்சிக்கோ நகரம் மெதுமணல் [Soft Soil with Sand] கொண்ட காய்ந்த ஏரிப்படுகை மீது வீடுகள் நிறுவப்பட்டுள்ளது. ஆதலால் நில நடுக்க சமயங்களில் சேதாரம் பேரளவு உண்டாகிறது. பூகம்பம் ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு [செப்டம்பர் 28 இல்] குறைந்தது 333 பேர் உயிர் இழந்ததாகத் தெரிகிறது. சுமார் 5400 பேர் காயப் பட்டனர். ஆயினும் 38 நபர் இன்னும் காணப்பட வில்லை.
++++++++++++++++++++++++++++++
S. Jayabarathan [September 12, 2021]
- மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்
- பிழை(ப்பு)
- வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் புதிய நூல் நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை
- பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் !
- எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’
- ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்
- ஐஸ்லாந்து
- குருட்ஷேத்திரம் 12 (கர்ணனின் முடிவுக்கு குந்தியே காரணம்)
- குருட்ஷேத்திரம் 11 (பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலியின் சபதம்)
- முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!
- கதிர் அரிவாள்
- உப்பு பிஸ்கட்