ரோகிணி கனகராஜ்
ஓடிஓடி சுண்டல் விற்றுக்
கொண்டிருந்தான்
ஓடாய் தேய்ந்துபோன
சிறுவன்…
பாடிபாடி பரவசமாய்
திரிந்து கொண்டிருந்தனர்
பரதேசிகள் சிலர்…
பருவத்தின் களைப்பில்
இளைப்பாறிக்
கொண்டிருந்தனர்
கடற்கரை காதலர்கள்…
வயிற்றுப்பிழைப்பிற்கான
வலியைத் தாங்கிக்கொண்டு
வைராக்கியத்துடன்
திரிந்துகொண்டிருந்தனர்
மீன்விற்பவனும் பாசிஊசி
விற்பவனும் பொம்மைகள்
விற்பவனும்…
மணலில் மட்டுமல்ல
மனதிலும் கோட்டைக்கட்டி
விளையாடினர் சிறு
குழந்தைகள்…
இவர்கள் எல்லோரும்
போனபின்பு அந்தக்
கடலும் கரையும் இரவின்
அந்தரங்கப் போர்வைக்குள்
நுழைந்துஒடுங்கக்கூடும்
மனிதனைப்போல என்று
நிலவும் நட்சத்திரங்களும்
வெட்கநிழலுக்குள் தம்மை
மறைத்துக்கொண்டன…
—————————— ——
- தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
- சாணி யுகம் மீளுது
- குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)
- குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
- ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்
- பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
- ஹைக்கூ தெறிப்புகள்
- அவரவர் நியாயங்கள்
- சுவர்
- ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
- கடலும் கரையும்
- கறிவேப்பிலைகள்
- ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்