டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

This entry is part 15 of 18 in the series 31 அக்டோபர் 2021

லதா ராமகிருஷ்ணன்

 

 

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாளாகிய அக்டோபர் 24 அன்று திரு. கே.எஸ்.சுப்பிரமணியனுக்கான எளிய நினைவஞ்சலியாய் அவருடைய எழுத்துகள் சிலவும் அவரைப் பற்றி சிலர் கூறுவதும் இடம்பெறும் ஒரு இருமொழித் தொகுப்பு புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.

அத்தகையதொரு நூலைக் கொண்டுவர வேண்டும் என்று சென்னையிலுள்ள எழுத் தாளர்கள் சிலரும் கூறினார்கள். டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனின் மகனும் மகளும் அயல்நாட்டில் பேராசிரியர்களாகப் பணிபுரிபவர்கள். அவர்களும் அப்படியொரு நூல் தங்கள் தந்தையின் நினைவாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்கள். டாக்டர் கே.எஸ். இருந்தபோதே தனது அடுத்த புத்தகத்தை புதுப்புனல் பதிப்பக வெளியீடாகக் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். அதன்படி புதுப்புனல் பதிப்பகம் இந்த நூலை நேர்த்தியாக வெளியிட்டுள்ளது. நூலின் தலைப்பு ‘நான் கே.எஸ்.பேசறேன்’.

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆளுமை.  எழுத்தாற்றல், மொழிபெயர்ப்புத்திறன், சமூக அக்கறை ஆகியவற்றை நினைவுகூரும் எளிய அஞ்சலிக்கூட்டம் ஒன்று புதுப்புனல் பதிப்பக அலுவலகத்தில் 24.10.2021 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது

 

இந்த நூலில் கே.எஸ்.சுப்பிரமணியனைப் பற்றி அவருடைய நெடுநாள் நண்பர்களும் எழுத்தாளர்கள் சிலரும் எழுதியுள்ள 10 அஞ்சலிக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கவிஞர் ரவி சுப்பிரமணியன், கவிஞர் இளம்பிறை, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், கவிஞர் கருணாகரன் சிவராசா (ஃபேஸ்புக் கில் அவர் பதிவேற்றியிருந்தது ஆகியோரின் நினைவஞ்சலிக் கட்டுரைகளும் இவற்றில் அடக்கம். இந்த நூலும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான (நேற்று) 24.10.2021 அன்று புதுப்புனல் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

 

கவிஞர் இளம்பிறை, கவிஞர் நந்தமிழ்நங்கை, எழுத்தாளர் திரு (இந்த நூலை வடிவமைத்துத் தந்தவர் இவரே), இன்னும் சிலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வை புதுப்புனல் பதிப்பக உரிமையாளரும் பன் முகம், புதுப்புனல் இலக்கிய இதழ்களை நடத்தியவரும், தன்னளவில் ஓர் எழுத்தாளருமான திரு.ரவிச்சந்திரன் வந்திருந்தவர்களை வரவேற்றார்.

திரு.கே.எஸ். சுப்பிரமணியனின் புகைப்படமும் அவருடைய நூல்களும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன.

‘நான் கே.எஸ். பேசறேன்’ என்ற தலைப்பிலான தொகுப்பு அரங்கில் வெளி யிடப்பட்டது.

டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன் தனக்குத் தந்தை போன்றவர் என்று தொடங்கி அவரைப் பற்றிய நினைவுகளை நெகிழ்வோடு அவையில் பகிர்ந்து கொண்டார் கவிஞர் இளம்பிறை.

இந்தத் தொகுப்பை வடிவமைத்த எழுத்தாளர் திரு குறிப்பிடத்தக்க தமிழ்ப் படைப்புகளை, குறிப்பாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளையும் நவீன தமிழ்க் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழிலக்கியத்தின் உலகத் தரத்தை எடுத்துக்காட்டியவர் திரு.கே.எஸ் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

 

நூலில் இடம்பெறும் அஞ்சலிக்கட்டுரைகளிலிருந்து சில வரிகள்;

 

டாக்டர் நரேந்திர சுப்பிரமணியன்

(டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் மகன்

He visited me infrequently through my four decades in the West. But he was there for me when it mattered most – when I underwent major and risky surgery. He, along with my wife, took care of me while I was hospitalized and while I recuperated over the next three months. He helped with the shopping, food preparation, cleaning, and other household work (not to mention the extra expenses) while I was too weak to attend to these matters and my health required special attention to nutrition and hygiene. I had never seen him do these things earlier and wouldn’t see him bother with them thereafter. When I visited India over the next few years, he remained very sensitive to my physical and emotional vulnerabilities and tolerant of my resultant prickliness. Every day since he passed away, I have appreciatively remembered his help through these crucial times, as well as much else that we shared and the many things he meant to me.

 

 

AJANTHA SUBRAMANIAN

(டாக்டர்கே.எஸ்.சுப்பிரமணியனின் மகள்)

My father was a man who found meaning in simple things. Although his professional life was in the Indian civil services and international development, he favored interpersonal over grand gestures. Perhaps because of his life-long career in institutions whose impact typically falls short of their lofty claims, he was suspicious of ideological formulations – no matter where they fell on the political spectrum. Instead, he was moved by the small, less heralded acts of humanity.

He took special pleasure in literature whose focus on everyday life captures the humor, pathos, and hope of the human condition. He also expressed his love of narrative through the stories he would recount to me and my brother, to my husband and kids, and to his many friends.

 


பா.ராசுப்பிரமணியன்திட்ட இயக்குநர், மொழி அறக்கட்டளை

 

பழகியவர்கள் அனைவராலும் கே.எஸ்என அன்புடன் அழைக்கப்படுபவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அவரைநினைவு கூர்ந்தால் பல நினைவுகள் அலைமோதுகின்றனஅவற்றுள் ஒரு சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:

எங்கள் மொழிஅறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து அவர் எங்களுக்கு அளித்த ஆலோசனைகளும் உதவிகளும் மறக்க முடியாதவைமொழி அறக்கட்டளைக்கு நிதி தேவைப்பட்ட ஒரு நேரத்தில் நிதி திரட்டித் தர முடியுமா என்று கேட்டபோது அவர்அளித்த  பதில்: “எனக்குக்  கொடுத்துத் தான் பழக்கம்கேட்டுப்பழக்கம் இல்லையே.”சொன்னபடியே அவ்வப்போது கொடுக்கத்தான் செய்தார்.

தமிழ்க் கவிதை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது தனக்கு எழும் சொற்களின் பொருள் குறித்த ஐயங்களை அகராதியில் தேடிக் கண்டுகொள்ள முடியாமல் அலுத்துப் போய்விடுவார்பிறகு நண்பர்களுடன் தொடர்புகொள்வார்அந்த அழைப்பு வட்டத்தில் நானும் ஒருவன்தெளிவு கிடைத்துவிட்டால் இந்த எளிய முறை தனக்கு எப்படித் தோன்றாமல் போனது என வியப்படைவார்.

 அயராமல்சலிப்படையாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்,  ஆங்கிலத் திலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்த்தார்ஆழ்ந்துஅனுபவித்துஉத்வேகத்துடன் மொழி பெயர்த்தார்.  என் சரித்திரம்  என்னும்  .வேசாமிநாதையரின்ஏறத்தாழ ஆயிரம் பக்கம்  கொண்ட , சுயசரிதையை  அவர் விரைந்து மொழிபெயர்த்து முடித்து  வியப்பில் ஆழ்த்தினார்.

 பழந்தமிழ் சங்க இலக்கிய நூல்களை மொழிபெயர்த்தவர் இக்காலக்  கவிஞர்களின்புதிய உத்திகள் கொண்டகவிதைகளை யும் மொழிபெயர்ப் பதில் எந்தத் தயக்கமும்  காட்டியதில்லைமொழியின்பழமையும் புதுமையும் அவரை ஆச்சரியப்படுத்தினாலும் மொழியின் அறுபடாச் சரடைக் கண்டுகொண்டார்.

 

கவிஞர் ரவி சுப்பிரமணியன்

பலர் எழுத்தாளராக மொழிபெயர்ப் பாளராக கலைஞனாக ஆகிவிடலாம்தான்ஆனால்மனசை எந்த கசடும் படியாமல் வைத்துக்கொண்டு மேன்மையை மட்டும் கொண்டாடி மகிழவும் துன்பப்படுபவர்களுக்கு இயன்றதை எல்லாம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு இவர் நன்றி சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் வரும் குணமும் எத்தனை பேருக்கு வாய்க்கிறதுஇவர்கள் பொருட்டல்லவா பிழைகள் மலிந்த வாழ்வை வாழும் என்போன்றோர்க்கும் சேர்த்துப் பெய்கிறது மழை.

சாகித்ய அகாடமியில் அவரோடு இணைந்து சில ஆண்டு ஆலோசனைக்குழு உறுப்பினராக பணியாற்றிய காலங்கள் எவ்வளவு இனிமையானவைதகுதியான எத்தனை பேருக்காக அவர் அங்கு வாதாடியிருப்பார்எத்தனை அரிய புத்தகங்கள் வர காரணமாக இருந்தார்அதோடு நில்லாமல் தெரியாத விஷயங்களை எந்த தன்முனைப்புமின்றி அவர் கேட்டுக்கொள்ளும் விதம் குழந்தமையானதுஎத்தனை விருந்துகள் எத்தனை பகிர்தல்கள்எத்தனை பயணங்கள்என் தனிப்பட்ட வாழ்வில் அவர் கைகாட்டிய திசைகள் எவ்வளவு.

அவர் மொழிபெயர்ப்பின் சிறப்புகளை சான்றுடன் எடுத்துக்காட்டியும் சரியான ஒற்றை சரியான சொல்லுக்காக அவர்படும் பாட்டையும் கவிஞர்களோடு அதை கலந்து பேசி அதை உறுதி செய்துகொள்ள அவர் பட்டபாடுகளும் தனிகட்டுரைக்கானவை.

 

 

கவிஞர் இளம்பிறை

இக்கட்டான தருணங்களில் உதவிகள் செய்து ஆறுதல் கூறி என்னை மட்டுமல்லாது எனது மகன்களையும் தொலைபேசியில் அவ்வப்போது விசாரிக்கும் என் பாசத் தந்தை கேஎஸ்அவர்களின் முகத்தை கடைசியாகக் காண முடியாத பெரும் வருத்தம் என் நெஞ்சை விட்டு நீங்கப் போவதில்லை.

எனக்கு சளி ,காய்ச்சல்இருமல் ஏதுமில்லை உங்களைப் பார்க்க வரலாமா?” எனப் போனவாரம் நான் தொலைபேசியில் கேட்டபோது,

” வேண்டாம்நீ பாதுகாப்பாக இருஅடுத்த வாரம் எனக்கு ஒரு சின்ன ஆபரேஷன்அதெல்லாம் முடிந்ததும் வா,” என்றார்.

தன்னால் யாருக்கும் கடுகளவு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது எனக் கவனமாக வாழ்ந்த கே.எஸ்.சார் தனது மரணத்திலும் அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

எனது 75 கவிதைகளை அவரே தேர்ந்தெடுத்துஆங்கிலத்தில் மொழிபெயர்த்துஅணிந்துரை எழுதி என்னைப் பெருமைப்படுத்தி மகிழ்வித்தவர்சாகித்ய அகாடமி கவிஞர்கள் சந்திப்புக் கூட்டத்திற்குவெளிமாநிலங்களுக்குச் சென்றபோது,எனது கவிதையை அங்கு வாசிப்பதற்காகஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்து, “துணிச்சலா வாசி“, என ஊக்கம் தந்தவர்.

தான் எழுதியவற்றை மொழிபெயர்ப்பு செய்ததை சிரத்தையுடன் புத்தகமாக்கி,’ ஒரு பகிர்தலாக‘ எனக் கையொப்பமிட்டு எல்லோருக்கும் அனுப்பித் தந்து மகிழ்ந்தவர்.

இவர்கள் எல்லாம் என்ன எழுதி விடப் போகிறார்கள்‘, என்ற முன் முடிவோடு புதிதாக எழுத வருபவர்களின் எழுத்துகளைஇலக்கிய அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்கள் பெரும்பாலானோர் படிப்பதோஅங்கீகரிப்பதோபாராட்டுவதோ இல்லாத சூழலில் தன்னைக் கவர்ந்ததனக்கு அறிமுகமே இல்லாததன் பார்வையில்பட்ட புதிய படைப்பாளிகளின் எழுத்துகளையும் வாசித்து மொழிபெயர்த்தவர் கே.எஸ்.சார்.

 

 

THIRU JAWAHAR VADIVELU

In the fast paced, frenetic world we find ourselves in today, even close friendships seem tonow have implicit boundaries. But the friendship that my father shared with KS uncle, was without any such. They were brothers in every sense of the word. It was special. The two years that I had spent with KS uncle in Manila, were greatly formative years. It gave me a sense of purpose, grounding and an exposure to an entirely new life, for all of which, I can’t thank him enough. His home in Manila was a true reflection of his large heart. Its doors were always open to his many friends and visitors who enjoyed being with him.

Sometime during the lockdown last year, I had a long chat with uncle, over the phone. He felt so happy for me, for how I had blossomed, he said. He felt that I had acquired a certain maturity in thought he hadn’t observed until then. He was overjoyed at the chat we had had. And something within me made me want to thank him finally for all that he had done for me. I’m happy that I did, for this chapter in our lives was about to draw to a close before long. He was gone soon after.

Abirami and I, cherish our many fond memories of KS Uncle. His amazing spirit shall continue to live on in our midst.

 

D.RAMACHANDRAN on behalf of MADRAS YOUTH CHOIR

Our Revered Dr.KS was one of the  Founders of Madras Youth Choir ( MYC), others being Late.Sri. M.B.Srinivasan, Dr.Vasanthi  &  Late Smt.  Zahida Srinivasan in 1970. He was our President for 18 years till his untimely demise. While we were planning to celebrate the Golden Jubilee of MYC under his Leadership, he left us creating a vaccum. 

நாங்கள் அவரை இன்முகத்தினராய்அன்பும் கரிசனமும் கொண்டவ ராய்எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மன உறுதியுடனும்நடுநிலைப் பாட்டுடனும் செயல்படும் ஆற்றல் கொண்டவராய்நகைச்சுவையும் கிண்டலும் கலந்த அழகான சிரித்த இன்முகம் கொண்டவராய்ஆழ்ந்த தமிழ்ப்பற்றும் ,தெளிந்த அறிவாற்றலும் கொண்டவராய்,, எதையும் ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் முடிவெடுக்கும் திறன் கொண்டவராய்வியத்தகு நிர்வாகத்திறன் கொண்டவராய் ,இவையனைத்தும் ஒருங்கே உருவெடுத்த ஒரு நல்ல மாமனிதராகப்பார்த்தோம்பழகினோம்அவர் நட்பைக் கொண்டாடி னோம்கொண்டாடுகின்றோம்

He was large hearted had the magnanimity to listen to others ‘ views & the humility to accept when he was wrong.   He never hesitated to ‘call a Spade a spade’. 

He had the amazing ability to express his thoughts through his impeccable  communication & oratory Skills, both in Thamizh & English. He was always there to encourage & appreciate young talents.

 

 

DR.KRISHNASWAMY

Although I like several books of KS, I am not tired of stating that I immensely enjoyed reading his ‘Sindhanai Ondrudaiyal’(சிந்தனை ஒன்றுடையாள்)in which KS comparesancient Sanskrit and ancient Tamil texts since he has proficiency in both the languages. He illustrates with remarkable acumen, how Indian way of thinking had evolved over the centuries and has so much in common, irrespective of the language. It happens to be my favourite. 

It is indeed rare to find someone who can be very light-hearted in his conversation and at the same time very deeply involved in his commitment to philosophy and literature– remaining a constant friend all along over the decades.  I met him a few weeks before he passed away.  “Like all your friends, I miss you KS – 67years is not a small timeframe to maintain a friendship,most cordially all the way!”.

 

 

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்

ஜே.கேயின் சஹ்ருதயர்கள் என்ற உறவில்தான் எங்கள் நட்பு மலர்ந்தது. இலக்கிய நெருக்கமும் இதயம் கலந்த அன்பும் அதை உன்னத ‘இமய மலை’ போல் வளர்த்தன. நான் அவரை சந்திக்கும்போது உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஜெயகாந்தனின் சமத்துவ மேஜையில் அருகருகிருந்து பழகியதால் எந்தவித ஏற்றமும் தாழ்வும் இல்லாத நட்பாக அது அமைந்தது. ஜெயகாந்தனின் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் முழுத்தொகுதிகள் தனித்தனிப் பதிப்பாளர்களால் வெளியிடப்பட்ட போது மதுரையில், சென்னையில், திருச்சியில் நாங்கள் ஒன்றாகக் கலந்துகொண்டது மறக்கமுடியாத நினைவு.

உரைநடை மொழிபெயர்ப்பில் வல்லவரான அவருக்கு கவிதையை மொழிபெயர்ப்பதில் மனத்தடை இருந்தது. என்னுடைய இடையறாத தூண்டுதலால் முதலில் என்னுடைய கவிதைகளையும் பிறகு மற்றவர்களின் கவிதைகளையும் மொழிபெயர்க்கத் துவங்கினார். அதனால் கவிஞர்களிடையே அவர் தோழமைக்குரியவரானார். சங்க இலக்கியத்தையும் பின்னர் அவர் மொழிபெயர்த்தார். கடைசி கடைசியாக கொரோனா யுகக் கவிதைகளையும் LOCKDOWN LYRICS என்று தன் மரணத்திற்கு சில மாதங்கள் முன்பு மொழிபெயர்த்த பேருழைப்பு அவருடையது.

சிறியன சிந்தியாத பண்பாளரான அவர் எவரையும் இழிவாகப் பேசியதில்லை. சாந்தமும் மெல்லிய நகைச்சுவையும் இயல்பாகக் கொண்ட அவர் ஒரே ஒரு முறை கடுமையாகப் பேச நான் கேட்டதுண்டு. சாகித்ய அகாதெமி விருதுக்கு அவர் நடுவராக இருந்த ஒரு சமயம் அவருடைய பரிந்துரை ஏற்கப்படாமல் மற்ற இருவரும் வேறு ஒரு கவிஞரைத் தேர்வு செய்தனர். இதனால் மெல்லிய சினத்தோடு ‘இந்தக் கவிஞர் அப்படி என்ன பெரிதாய் எழுதி விட்டார் என்று கோபித்துக்கொண்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு அதே கவிஞரின் பரிசு பெற்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொடுத்தார். அத்துடன் என்னிடம் ‘அந்தக் கவிஞர் நல்லாத்தான் எழுதியிருக்காரு’ என்றும் சொன்னார். ‘நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம்’ என்ற வரியின் வடிவை அவர்பால் கண்டேன்.

 

கவிஞர் கருணாகரன் சிவராசா.

K.S. இன் இலக்கிய ஆர்வத்தைப் பற்றிச் சொல்லத்தேவையில்லைஅது எல்லோரும் அறிந்ததுஅந்தளவுக்கு இலக்கியத்துக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்தவர் K.S.

பலரும் கொவிட் 19 இன் போது முடங்கியிருந்தபோது அந்த முடக்கத் திற்குள்ளும் இயங்கினார் K.S.. அதுதான் அவருடைய அடை யாளம்அப்பொழுது நீடித்த LOCKDOWN  யே ஆதாரமாக வைத்து ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டார்தமிழில் லொக்டவுணை மையப்படுத்தி அந்தக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை களை தொகுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதே K.S. இன் திட்டம்இதற்கு டிஸ்கவரி ஆதரவளித்ததுலொக்டவுண் காலம் சரியாக முடிவடைவதற்கு முன்பே புத்தகம் வெளியாகி விட்டதுஅதுவே இன்று என் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. LOCKDOWN LYRICS. அத்தனை வேகமாக இயங்கியிருக்கிறார் K.S.

தொகுப்பில் மொத்தமாக 103 பேரின் கவிதைகள் உண்டுஇவ்வளவு கவிதைகளையும் ஏறக்குறைய இரண்டு மாதத்திற்குள் மொழிபெயர்த் திருக்கிறார் என்று நினைக்கிறேன்ஏனென்றால் என்னுடைய கவிதைகளை அவர் பெற்றுக் கொண்ட காலம், 2020 யூலை இறுதிப்பகுதிபுத்தகம் வெளியிடப்பட்டது 2020 ஓகஸ்ற்றில்அப்படியென்றால் ஒரு மாதத்திற்குள்தான் பெரும்பாலான கவிதைகளை ஆங்கிலப் படுத்தியிருக்கிறார் K.S. அதுவும் இதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்தது மட்டுமல்லகவிஞர்களைத் தொடர்பு கொண்டு கவிதைகளையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்ததே பெரியவேலைஇந்தியாவிற்குள் மட்டுமென்றில்லாமல்இலங்கையைச் சேர்ந்த கவிஞர்கள்புலம்பெயர் தேசங்களிலிருப்போர் என்று ஒரு பெரிய பரப்பில் பலரையும் உள்ளடக்கியிருப்பதால் இது பெரிய வேலையே.

ஆனால்திட்டமிட்டவாறே தீர்மானித்த கால எல்லைக்குள் புத்தகம் வெளிவந்து விட்டதுஇதில் ஓரளவுக்கு K.Sக்கு மகிழ்ச்சி என்று அறிந்தேன்ஆனாலும் புத்தகத்தை உரிய கவிஞர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று K.S. முயற்சித்துக் கொண்டிருந்தார்இந்தியப் பரப்பிற் குள்ளும் கொவிட் 19 நெருக்கடிகள்ஊரடங்கு நிலை போன்றவற்றினால் பணிகள் தடைப்பட்டுக் கொண்டிருந்தனஇதை விட வெளிநாடுகளுக்கான புத்தகங்களை அனுப்புவது மேலும் சிரமமாக இருந்ததுஇதற்காக அவர் நமக்கு மின்னஞ்சலை அனுப்பி நிலைமையைக் குறிப்பிட்டிருந்தார்இது அவருடைய பொறுப்புணர்வையும் படைப்பாளிகளின் மேல் கொண்டிருக் கும் ஆழமான பற்றுணர் வையும் மதிப்பையும் உணர்த்துகிறது.

 

நூலில் இடம்பெறுவன:

அ) டாக்டர் ஏ.எஸ். தமிழில் எழுதி வெளியாகியுள்ள கட்டுரைகள்

( அவருடைய கட்டுரைத்தொகுதிகளில் இடம்பெறுபவை) சில

 1. பாரதியின் மனிதநேயம்
 2. ஜெயகாந்தனின் படைப்புலகம்
 3. ஜெயகாந்தனின் முன்னுரைகள்
 4. பிச்சமூர்த்தியின் கவிதையுலகம்
 5. சிந்தனை ஒன்றுடையாள்
 6. இலக்கிய மொழிபெயர்ப்பு – ஓரு அனுபவப் பகிர்தல்

ஆ) கடவுளின் கையெழுத்து என்ற தலைப்பிலான டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியனின் தமிழ் மொழியாக்க நூலிலிருந்து (டாக்டர் மணி பௌமிக் எழுதிய உலகப்புகழ் பெற்ற CODE NAME GOD நூலின் தமிழாக்கம்) இரண்டு அத்தியாயங்கள்

) A FACE-TO-FACE SESSION WITH DE. K.S.SUBRAMANIAN

ஈ) டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகள் சில.

 1. A PEERLESS SPIRITUAL MENTOR
 2. HOMAGE TO MBS
 3. C.S.SUBRAMANIAN – A QUINTESSENTIAL PORTRAIT
 4. PHILIPPINES – LAND OF SMILES
 5. THE ALLURE OF SANGAM WOMEN POETRY
 6. Dr.K.S.SUBRAMANIAN on his volume LOCKDOWN LYRICS

உ) டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில

1.FROM U.VE.SA’S THE STORY OF MY LIFE

 1. FROM ASOKAMITHRAN’S CHENNAI, A KALAIDOSCOPE

3.FROM MENTORS, A forthcoming ESSAY-COLLECTION BY BAVA CHELLADURAI

 1. a) Preface and b) (A Face-to Face Session with Writer Bava Chelladurai, published in the e-magazine KANALI )

ஊ) A HANDFUL OF CONTEMPORARY TAMIL POEMS TRANSLATED INTO ENGLISH BY DR.K.S.SUBRAMANIAN

எ) நினைவஞ்சலிக் கட்டுரைகள்

விலை: ரூ.300 பிரதிகள் இன்னும் ஒரு வார காலத்தில் தயாராகிவிடும்.

முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை : ரூ.250(தபால் செலவு தனி)

 

தொடர்புக்கு:

புதுப்புனல் பதிப்பகம்

பாத்திமா டவர்(முதல் மாடி)

117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

(ரத்னா கபே எதிரில்)

சென்னை – 600 005

அலைபேசி எண்கள் : 9884427997, 9962376282

மின்னஞ்சல்: pudhupunal@gmail.com

________________________________________

 

Series Navigationமரமும் கொடியும் செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *