திருச்சி. எஸ் ஆல்பர்ட். 70களின் கோபக்கார தீவிர நவீன கலை இலக்கிய நண்பர்கள். அன்றைக்கே ‘இன்று ‘ என என்றைக்கும் இன்று என்பது தாங்கள் என்றவர்கள் திருச்சி வாசக அரங்கு இளைஞர்கள். அவர்களுள், ஸாம் என்று அழைக்கப்பட்ட எஸ். சாமிநாதனின் இயக்கம் விட்டுக்கொடுக்காத் தன்மைத்தது.
திருச்சி ‘இன்று ‘ எஸ். சாமிநாதன், தனக்கான தான் செய்வதற்கான வேலையாக இடமாக நவீன தமிழ் எழுத்து, நவீன தமிழ் நாடக அரங்கு, உலகளாவிய மாற்று / கலை சினிமா /ஆவணமாக்கம் என்று வேரோடிப் படர்ந்த, கண்களில் படா வேர் காரணமாக, கிளைத்த விளைந்த அவர் பெருமளவில் கொள்ளப் படாதவராகி, மனசில் பதிஞ்ச காலடிச் சுவடுகளுக்கு மட்டும் உரியவராக மாறிப்போனார்.
தான் காணப்படவில்லை படிக்கப்படவில்லை கொண்டாடப்படவில்லை என்றெல்லாம் கவலைப்படாத பல அன்றைய இளைஞர்களைப் போலவே, சாமிநாதனும் இருந்தார். இயங்கினார்.
சென்ற நவம்பர் 2020ல் , தான் மறைவதற்கு முன் தன் எழுத்துகளை பதிப்பிக்கவேண்டும் என்று இறுதி நாள் வரை இயங்கிய அவர், இந்த 2021ல் இல்லையெனும் இயற்கைப் போக்கினூடே, என்றும் “. ‘இன்று ‘ எஸ். சாமிநாதன் ஆக இருப்பார் இருக்கிறார் என்பதை அவரது அன்பு குடும்பத்தினர் நிலை நிறுத்த, “எஸ். சாமிநாதன் விருது” நிறுவி, இந்த ஆண்டு முதல் வழங்குகின்றனர்.
தளம் ஒருங்கிணைப்பில், தேர்வுக்குழுவினர், பெறப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலித்து, உரிய விருதாளர்களைத் தெரிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
எஸ். சாமிநாதன் விருது பெறும் கலை இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள்.
- தீபாவளிக் கவிதை
- நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு
- கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……
- புறம் கூறும் அறம்
- கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மானித்தார்
- தமிழ் நாட்டில், அரசியல் கலந்த போராட்டங்களினால், தடுக்கப்பட்ட முக்கியமான தொழில் திட்டங்கள்
- சைக்கிள்
- மெய்நிகரில் மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !
- இயக்கி – புதினத்தின் முதல் அத்தியாயத்தின் முக்கிய பகுதி
- திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்
- “தையல்” இயந்திரம்
- குருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர் பீஷ்மர் உரைத்த கதை)
- என்னை நிலைநிறுத்த …
- எஸ். சாமிநாதன் விருது
- உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
- சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80
- 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்