கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மானித்தார்

This entry is part 5 of 17 in the series 7 நவம்பர் 2021

FEATURED

 

 

Posted on November 6, 2021
 

 

 
 
 
 
 
 

பூகோளம் முன்னிலைக்கு மீளாது !

காலவெளி ஒருபோக்கில்

மாறிப் போச்சு !

வாலிப வனப்பு அதற்கினி

மீளாது !

நூறாண்டு போராடி நாம்

காரணங்கள்

களை எடுத்தாலும்,

முன்னிலைக்கு

மீளாது ! மீளாது! மீளாது

பூகோளம் !

 

சூடேறிப் போச்சு நமது

பூகோளம் !

வீடேறி வந்திருச்சு

சீர்கேடு ! .

நாடெல்லாம் முடமாயி

நாசமாகப் போச்சு !

நாமென்ன செய்யலாம்

நாட்டுக்கு ?

 

நூறாண்டுக்கு

முன்னிருந்த நிலைக்கு பூமி

மாறாது !

போன வாலிபம் பூமிக்கு

வாராது ! மீளாது !

 

பூமி சுற்றச்சு பூகம்பத்தால்

சாய்ந்து போச்சு !

நிமிர்த்த முடியாது ஆயிரம்

கோடரியால் !

எரிமலை பொங்கி எழுந்து

கனல் குழம்பு

கொட்டி ஆறாய், ஆறாய் ஓடுது !

விஷ வாயுக்கள்

சூழ்வெளியை நிரப்புது !

பூகோளம் முன்னிலைக்கு

மீளாது

ஒருபோதும் !

 

===========================

2021 காப்பு-26 [COP-26] பேரரங்கம் செய்த தீர்மானங்கள்

  1. வரம்பு குறிக்கோள் உஷ்ணம் 1.5 C என்பது மாறவில்லை.
  2. ஆண்டுக்கு 1.4 பில்லியன் டன் கரிவாயுக் குறைப்பு நல்ல முயற்சி.
  3. சைனா உலகப் பூகோளக் கரி வெளியேற்றத்தில் 30% பங்கு பொறுப்பு
  4. மற்ற நாடுகள் 70% அளவுக்குப் பொறுப்பு.
  5. சைனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் நிலக்கரி பயன்படுத்தி வருகின்றன. [2021] காப்பு-26 பேரரங்கில் ரஷ்யா, சைனா கலந்து கொள்ளவில்லை.
  6. சைனா பேரளவு சூரிய, காற்றாடி எரிசக்தி மீள்புதிப்பு சாதனங்கள், எலெக்டிரிக் வாகனங்கள், பஸ்கள் பயன்படுத்தி வருகிறது.
  7. இந்தியப் பிரதமர் மோடி 2070 ஆண்டில்தான் பூஜிய விஷவாயுச் சூழ்வெளி இந்தியாவில் கொண்டுவர இயலும் என்று அறிவித்தார்.
  8. ரஷ்ய & சைனப் பிரதிநிதிகள் 2060 ஆண்டுக்குள் பூஜிய விஷ வாயுக் கடைப்பிடிப்பு என அறிவித்தார்.
  9. ஓர் ஆண்டுக்கு 1.4 பில்ல்லியன் டன் கரிவாயு வெளிவீச்சு குறைப்புத் திட்டம் பூஜிய விஷ வாயுச் சூழ்வெளியை 2050 இல் நிறைவேற்றும்.
  10. இப்போதுள்ள நிலமை நீடிப்பு, மேலும் வெளிவீச்சுகளைக் குறைக்காமை இன்னும் 11 ஆண்டுகளில் வரம்பு உஷ்ணம் 1.5 டிகிரி செல்சியசுக்கு எட்டிவிடும். இது 50% அனுமான அறிவிப்பு.

தகவல்

  1. https://ukcop26.org/
  2. https://headtopics.com/uk/cop26-leaders-under-pressure-to-find-climate-breakthrough-bbc-news-22355891

S. Jayabarathan [ November 6, 2021 ] [R-0]

 
 
 
Attachments area
 
Preview YouTube video Is green hydrogen the answer to the climate crisis? | DW Documentary Preview YouTube video Climate at one minute to midnight, Boris Johnson 🌍 COP26 @BBC News live 🔴 BBC Preview YouTube video The Problem with Solar Energy in Africa Preview YouTube video The Economics of Nuclear Energy
Series Navigationபுறம் கூறும் அறம்      தமிழ் நாட்டில், அரசியல் கலந்த போராட்டங்களினால், தடுக்கப்பட்ட முக்கியமான தொழில் திட்டங்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *