ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம்
GE Small Modular Reactor (SMR)
++++++++++++++++
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++++++++++
துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை நிலையங்கள் அமைப்பு
2020 ஆண்டில் இப்போது 30 நாடுகளில் சுமார் 100 மெகாவாட் முதல் 1600 மெகாவாட் திறத்தில் இயங்கி வரும் 460 அணுமின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்து, மின்வடங்களில் பரிமாறி வருகின்றன இதுவரை உலகில் முப்பெரும் அணுவுலை விபத்துகள் [அமெரிக்காவில் திரிமைல் ஐலண்டு விபத்து, சோவித் ரஷ்யாவில் செர்நோபிள் விபத்து, ஜப்பானில் புகுஷிமா விபத்து] நேர்ந்து பொதுமக்கள் பலரைப் புலப்பெயர்ச்சி செய்தும், பலருக்குக் கதிரடிக் கொடுத்தும், பேரிடர் அளித்தும் அச்சமூட்டி வந்துள்ளன. இந்த விபத்துகளால், பொதுநபர் இடரோடு, அணுவுலை இயக்க அமைப்பாளருக்குப் பெருத்த நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளன. மேலும் உலகில் புதிய அணுமின் உலைகள் கட்டுவது நிறுத்தப் பட்டோ, தாமதிக்கப் பட்டோ, பழைய அணுவுலைகள் மூடப்பட்டோ, அல்லது செம்மை செய்யப்பட்டோ, புதிய அமைப்பு முறைகள், கட்டுப்பாட்டு விதிகள் மாற்றப் பட்டோ செலவுகள் எல்லைக்கு மீறி விட்டன. ஆகவே அவற்றைப் பாதுகாப்புடன் இயக்க விட்டுப் புதிய சுற்றுச் சூழல் மாசில்லா முறைகளில் சூரிய மின்சார உற்பத்தி, காற்றாலை மின்சார உற்பத்தி செய்ய நாடுகள் துவங்கி விட்டன.
Concept Drawing of GE High Temperature Gas Cooled Reactor.
Image courtesy of World Nuclear Association
ஆனால் நிலக்கரி, இயல்வாயு எரிசக்தி மின்சாரம், அணுசக்தி மின்சாரம் போன்று தொடர்ந்து பேரளவு அடிப்பளுத் திற மின்சாரம் [Baseload Power] பரிமாற சூரியசக்தியோ, காற்றாலை சக்தியோ ஈடு செய்ய முடியவில்லை. மேலும் சூரிய சக்தியை இரவில் பரிமாறச் சேமித்து வைக்க முடியவில்லை. காற்றில்லா சமையங்களில் மின்சாரப் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தம் அடைகிறது. அடுத்து அணுப்பிணைவு சக்தி [Nuclear Fusion Energy] வாணிப ரீதியாக, மக்களுக்கு வசதிப்படும் வரை, இப்போதுள்ள அணுப்பிளவு சக்தி [Nuclear Fission Power] நிலையங்கள் தொடர்ந்து இயங்கி வரவேண்டும். கதிரியக்கம் இல்லாத, கதிரியக்க மாசுக்கள் சேராத, புதிய அணுப்பிணைவு நிலையங்கள் வாணிப உலகில் வருவதற்கு 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம்.
இப்போது மேலும் ஒரு பிரச்சனை உண்டாகி விட்டது. துருவப் பிரதேசங்களில் ஆயில் கிணறுகள் தோண்டவும், வட அமெரிக்க, ஐரோப்பிய வடக்குக் குளிர்ப் பகுதி வீடுகளுக்கு கணப்பு சக்தி, மின்சாரம் அனுப்பவும், கடலிருந்து சுவைநீர் எடுக்கவும், உள்நாட்டில் சிறு நகரங்களுக்கு அடிப்பளு மின்சாரம் பரிமாறவும் சிற்றணுவுலை தேவைப்படுகிறது. இந்த தேவை கனடா, அமெரிக்கா, ரஷ்யா, ஃபின்லாந்து, ஜப்பான், சைனா, இந்தியா போன்ற நாடுகள் 200 MWe முதல் 300 MWe மின்திறம் உடைய பற்பல தொழிற்கூட கட்டமைப்புச் சிற்றணுவுலை நிலையங்கள் [Small Modular Reactor] (SMR-200 MWe, SMR-300 MWe) நிறுவத் திட்ட மிட்டுள்ளார். இச்சிறு அணுமின் உலை உறுப்புகள் தொழிற்கூடத்திலே சேர்ப்பாகித் தயாராகிக் குறிப்பிட்ட கட்டு மான இடத்துக்கு முழுமையாக வந்து சேரும்.
++++++++++++++++
https://en.wikipedia.org/wiki/
+++++++++++++
++++++++++++++++++++++++++++++
தொழிற்கூடக் கட்டுமான சிற்றணுவுலைச் சிறப்புகள், தயாரிப்பு நிறைபாடுகள்
- கட்டுமானம்,. சோதிப்பு, சீர்ப்படுத்து போக்குவரத்து செலவுகள் குறைவு.
- கட்டுமான எளிமை, மாற்றுதல் எளிமை, சோதிப்பு எளிமை.
- மாநிலத்தில் உள்ள நடுத்தர மின்வடங்கள் ஏந்திச் செல்ல வசதி
- சிற்றணுவுலை தயாரிக்கும், இயக்கும் காலம் குறைவு
- யந்திர சாதன இணைப்பு, அடுக்கு எளிது.
- விபத்து நேர்ந்தால் விளையும் கதிரியக்க மாசுகள் குறைவு.
- அணு உலை மாற்றம் செய்வது, சோதனை செய்வது எளிது.
- தூர இடங்களுக்கு, துருவப் பகுதி இடங்களுக்கு தூக்கிச் செல்வது எளிது.
+++++++++++++++++++++++
Because of radiation given off in the fission reactions, the reactor core is completely contained and separate from the electric generation part of the plant.
வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்
http://www.
https://en.wikipedia.org/wiki/
Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal
+++++++++++++++++++
அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள்
2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய் கோகலேயும் அமெரிக்க அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது. பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ? அணு உலை இயக்கும் இந்தியாவா ? அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா ? [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.] இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது. 2019 ஆண்டு அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.
2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது. “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம். இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்] முனைந்துள்ளது. அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன. நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும். ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.
++++++++++++++++++++++++++++++
- பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்
- தன்னதி
- எங்கே பச்சை எரிசக்தி ?
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- விடியல் தூக்க சுகம்
- ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….
- கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்
- இரண்டு நரிகள்
- சாபம்
- ஹாங்கிங் ரொக். விக்டோரியா
- வேடிக்கை மனிதரைப் போல
- நெல் வயல் நினைவுகள்
- பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.
- ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்
- அழகியலும் அழுகுணியியலும்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்
- ஞானம்