FEATURED
Several flights from Australia, New Zealand and Fiji to Tonga were postponed due to the ash cloud.
Early data suggests the volcanic eruption was the biggest since the 1991 blast at Mount Pinatubo in
பசிபிக் பெருங்கடல் தொங்கா தீவு அருகில் சீறி எழுந்த சுனாமியால் பாதிக்கபட்ட கிழக்காசிய நாடுகள்
2022 ஜனவரி 15 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள தொங்கா தீவு அருகில் அதிகாலை 4;26 மணிக்கு ,7.6 ரிக்டர் அளவு பூகம்பம் உண்டாகி, கடல் அடித்தள அசுர எரிமலை பீறிட்டு 12 மைல் [20 கி.மீ. ] உயரத்துக்குப் புகைமண்டலம் எழுந்தது. அத்துடன் பேரளவு ஆற்றல் சுனாமி தூண்டப்பட்டு, கிழக்காசிய நாடுகளின் கடர்கரையில் சுமார் 49 அடி உச்ச உயரத்தில் பேரலைகள் தாக்கியுள்ளன. அந்த சமயத்தில் 6.2 ரிக்டர் பூகம்பம் ஹவாயி தீவை ஆட்டி அசைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பசிபிக் ஆசிய நாடுகள் ஜப்பான், டைவான், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பெரு, ஹவாயி, பிஜி தீவு, தக்க தருணத்தில் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. இயற்கையின் இந்த கோரப் பேரிடர் பேரழிவுகளால் தொங்கா அரசாட்சியைச் [TONGA KINGDOM] சேர்ந்த 169 தீவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார். தொங்கா அரசாங்கப் பரப்பு ஹவாயிக்கு தென்மேற்கு திசையில் சுமார் 5000 கி.மீ.[3100 மைல்] தூரத்தில் உள்ளது.
2014 ஆண்டுக்குப் பிறகு ஹுங்க தொங்கா எரிமலை [HUNGA TONGA VOLCANO] தற்போது 2021 டிசம்பர் 20 இல் வாய் திறந்து உள்ளது. டிசம்பர் 25 இல் வாய் மிகப் பெரிதாகி விஷவாயுப் புகை மண்டலம் 12 மைல் [20 கி.மீ.] உயர்ந்து சுமார் 30 மைல் [50 கி.மீ.] அகலம் பரவி விட்டது. அதைவிடத் திரட்சி ஆகி 2022 ஜனவரி 14 இல் அதன் இடி முழக்கம் 40 மைல் தூரத்தில் [65 கி.மீ.] கேட்டுள்ளது. அந்த இடி நாதம் 520 மைல் [840 கி.மீ.] தூரமுள்ள சமோவாக்கு [Samoa] எட்டி விட்டது. அந்த பயங்கர இடிச் சத்தம் 430 மைல் [700 கி.மீ.] தூரமுள்ள பிஜி தீவு, 1200 மைல் [2000 கி.மீ.] தூரமுள்ள நியூஜிலாந்து, 6000 மைல் [9700 கி.மீ.] தூரமுள்ள அலாஸ்கா வரை சென்றுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் சில சமயத்தில் 200,000 மின்னல் அடிப்புகள் பதிவாகி உள்ளன. எழும் புகை இருட்டடிப்பு வாயு [ஸல்ஃபர் டையாக்சைடு] 400,000 டன் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இது போன்ற அசுர எரிமலைச் சுனாமிகள் 100 கீழ் நேர்ந்துள்ளன என்று அறியப்படுகிறது. 2022 ஜனவரியில் பீறிட்ட ஹுங்க தொங்கா எரிமலை ஆயிரத்தில் ஒன்று என்று கருதப் படுகிறது.
The shockwave was registered as far away as Alaska and Chennai in a sharp rise and fall of air pressure. The booming sound was reportedly heard as far as New Zealand that lies about 2,500 km from Tonga.
More recent reports claimed that most communications lines could be down for up to two weeks. Nevertheless, Tonga also made the news on the crypto front. The tiny island nation in the Tasman Sea of the South Pacific Ocean is accepting bitcoin donations in the aftermath of Saturday’s volcanic shockwave that caused the tsunami.
தகவல்:
https://en.wikipedia.org/wiki/
S. Jayabarathan [20 January 2022] [R-0]
- குவிகம் ஜனவரி 2022 இதழ் வந்துவிட்டது
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்
- மனநோய்களும் திருமணங்களும்
- கவிதைகள்
- கவிதை
- இலக்கியப்பூக்கள் 230
- சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்
- உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14
- விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை
- நகராத அம்மிகள்
- வேளிமலையின் அடிவாரத்தில்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2
- பசிபிக் பெருங்கடல் தீவு ஹூங்கா தொங்காவில் சீறிய கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி
- கவிதைகள்
- முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை
- ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு