மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் சஞ்சிகை நடத்திய மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில், பரிசுகளை வென்றுள்ளனர்.
ஞானம் இதழின் பொறுப்பாசிரியர் திரு.ஞானசேகரன் அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாபெரும் இலக்கியப் போட்டி உலகளாவிய ரீதியாக நடைபெற்றது.
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, சிறிய பத்திரிகை ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. உலகம் முழுவதிலுமிருந்து பல எழுத்தாளர்கள் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர்.
மேற்கண்ட பிரிவுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன:
கட்டுரை வகை – எஸ்.பத்மநாதனின் ‘சிந்தனைப் பூக்கள்’ மற்றும் ‘எதுவரை’ ஆர்.என். லோகேந்திரலிங்கம்.
நாவல் வகை – குரு அரவிந்தனின் ‘அம்மாவின் பிள்ளைகள்’ – போர்க்கால சூழலை, மக்கள் பட்ட அவலத்தைக் கண்முன்னே கொண்டு வந்த நாவல். தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள், யுகமாயினி இதழ்களின் போட்டியில் பரிசு பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு.
போட்டியில் பங்கு பற்றிப் பரிசு பெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களுக்கும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் குரு அரவிந்தன் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
—————————————–
- நம்பிக்கையே நகர்த்துகிறது
- மனிதனின் மனமாற்றம்
- என் காதலி ஒரு கண்ணகி
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் [19 -20]
- அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !
- பாவண்ணனை அறிவோம்
- காதல் ஒரு விபத்து
- ஒரு கல்லின் கதை
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 4
- தடை
- முதிர்ச்சியின் முனகல்
- கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்
- சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !
- கவிதையும் ரசனையும் – 26
- ஒரு சிறைக்கைதியின் வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !