போ. ராஜன்பாபு
அந்த எஜமான் வீட்டில்
நாயும்
பூனையும்
கிளியுமாக
செல்லபிராணிகள்
மூன்று.
கட்டியணைத்து தூங்கி கொள்ளவும்
கையில் பிடித்து நடந்து செல்லவும்
நாயும் பூனையும் எஜமான் அருகிலேயே.
கிளிக்கு மட்டும் தனிமை பரிசு
திரும்பிபேசுவதாலும்
பறந்து செல்லும் என்பதற்காகவும்.
கிளியோ
சிறகுகள் வளர்ந்திருந்தும்
கூண்டு திறந்துதிருந்தும்
சோலைகளை நோக்கி பயணம் செய்யவில்லை
கொஞ்சி பேசிய பொழுதுகளையும்
எப்போதோ கிடைத்த பழங்களை
மீண்டும் கிட்டுமென்று காத்திருந்தது
நனவிலியில்
முடிந்த பயணத்தின்
முடிவுரா நினைவுகளுடன்