கல்லிடை சொற்கீரன்.
மெலி இணர் நவிரல் ஒள் வீ சிதற
வான் அதிர் உடுக்கள் வெள் நிலம்
வீழ்ந்து பரந்து விழி விழி உறுத்து
வியத்தல் அன்ன நின்னைக்கண்டு
நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய்.
வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு
மீள்வழி நோக்கி னப்பரவை
உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள்
எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் .
அதனை அழித்திட வருவான் என்னே.
கலங்கல் மன்னே.காலையும் விரியும்.
———
பொழிப்புரை
—
மெல்லிய பூங்கொத்து உடைய முருஙகை மரத்தின் ஒளிசிந்தும் சிறு பூக்கள் உதிர்ந்து தரையில் படர்ந்து கிடப்பது வானிலிருந்து விண்மீன்கள் உதிர்ந்து வெறும் தரையில் கிடந்து கண்களைப்போல உன்னை வியந்து வியந்து பார்க்கின்றன. மணிகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த தலைவியே! உன் தலைவன் திரும்பி வரும் அந்த நெடிய வழியை நீ காத்துக்கிடக்கும் காலத்தின் நீள்வாய்க் காண்கின்றாய்..வெயி
தவிக்கும் தலைவியின் எதிர்பார்ப்பை சங்கத்தமிழ் நடை செய்யுட்கவிதையாக்கி நான் எழுதியுள்ளேன்..
-கல்லி
- திருப்பூர் இலக்கிய விருது 2022
- வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 13
- சொற்களின் சண்டை
- மனசு
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….
- சற்று யோசி
- பூ
- PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்
- திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்
- மெலி இணர் நவிரல் ஒள் வீ சிதற
- தெளிந்தது
- நஞ்சு