கவிதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 14 in the series 3 ஜூலை 2022

 

கவிநெறி

ஆத்தா
சோறு வடித்த நீராகாரம் கொடுத்தாள்,
அரசு,
புட்டிக்குள்ளிருந்து பூதம் கொடுத்தது.
 
                    💔
 
மனைவியின் சேலையை
சரிசெய்யச் சொல்லும் நான்தான்,
மதுக்கடை பக்கம்
அந்த அந்தரங்க உறுப்பை
காட்டியவாறு படுத்திருக்கிறேன். 
 
                    💔
 
வட்டி கடையில் அடகு வைத்த
ஜிமிக்கிகள் வந்து
ஆடாவிட்டால் என்ன?
எனது ஆட்டம் பார் மகளே!
 
                    💔
 
கூலி வேலைக்கு செல்லாத
பெண்டாட்டியின் கொண்டையை
பிடித்திழுத்தான் ;வரவில்லை காசு.
வந்ததோ புடி மயிரு.
 
                    💔
 
அடுப்படியில் தூங்கும் பூனை
பிடித்து வைத்திருந்தது எலியை.
எந்த மனைவிமார் 
சொல்ல வழியுண்டு தன்வலியை?
 
                            ௦௦௦
Series Navigationகவிதைகள்சந்திப்போம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *